டெல்லியில் விரைவில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்

டெல்லியில் விரைவில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்
Updated on
1 min read

இந்தியாவின் முதல் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் வியாழனன்று தலைநகர் டெல்லி வந்து சேர்ந்தது.

6 பெட்டிகள் கொண்ட இந்த ஓட்டுநர் இல்லாத ரயில் தென்கொரியாவிலிருந்து வந்துள்ளது. 2016-ம் ஆண்டு இறுதியில் டெல்லியில் இது ஓடத்தொடங்கும்.

டெல்லி மெட்ரோ கட்டுப்பாட்டு மையத்திலிருந்து இந்த ரயில்கள் முழுதும் கட்டுப்படுத்தப்படும். தொடக்கத்தில் ரயில் ஓட்டுநர்கள் நியமிக்கப்படுவார்கள், ஆனால் போகப்போக ஓட்டுநர்கள் விலக்கிக் கொள்ளப்படுவார்கள். ரயிலின் முழு இயக்கமும் மையக் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்படும்.

குஜராத் முந்த்ரா துறைமுகத்துக்கு வந்த இந்த உயர் தொழில்நுட்ப ரயில், இதற்காகவென்றே வடிவமைக்கப்பட்ட ராட்சத டிரெய்லர்கள் மூலம் சாலை வழியாக டெல்லிக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த ரயில்கள் மஜ்லிஸ் பார்க்-ஷிவ் விஹார் இடையே 58கிமீ பாதையிலும், ஜனக்புரி (மேற்கு)-பொட்டானிக்கல் கார்டன் இடையே 38 கிமீ பாதையிலும் இயக்கப்படவுள்ளது.

இந்த ரயில்கள் அதிகபட்ச வேகம் மணிக்கு 95கிமீ என்று வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மணிக்கு 85கிமீ வேகத்தில் பயணிக்கும். மேலும் சராசரி வேகம் 35 கிமீ-க்கும் சற்று கூடுதலாகச் செல்லுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பெட்டியிலும் சுமார் 380 பயணிகளுடன் மொத்தம் 2,280 பயணிகள் இதில் பிரயாணிக்கலாம். சிசிடிவி காமராக்கள் பொருத்தப்பட்டு இந்த ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in