

சாமியார் அசரம் பாபு தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றத்துக்காக 2013-ம் ஆண்டில் இருந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி அவர் ஏற்கெனவே இரண்டு முறை கீழமை நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருந்தார். அவை தள்ளுபடியாயின. பின்னர் உயர் நீதிமன்றத்தில் அவரது ஜாமீன் மனுக்கள் 2 முறை தள்ளுபடி செய்யப்பட்டன. உச்ச நீதிமன்றமும் ஜாமீன் தர மறுத்துவிட்டது.
இந்நிலையில், இவரின் ஜாமீன் மனு தொடர்பாக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நேற்று முன்தினம் ஆஜராகி வாதாடினார். பின்னர் எதிர்த்தரப்பு வாதத்தையும் நீதிமன்றம் கேட்டது. கூடுதல் மாவட்ட நீதிபதி மனோஜ் குமார் வியாஸ், மனுவை தள்ளுபடி செய்தார். இதன் மூலம் ஜாமீன் மனு ஆறாவது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.