உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதை கட்டாயமாக்க குஜராத் அரசு முடிவு: காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு

உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதை கட்டாயமாக்க குஜராத் அரசு முடிவு: காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு
Updated on
1 min read

காங்கிரஸ் கட்சியின் கடும் எதிர்ப்பை மீறி, வரும் அக்டோபரில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதை கட்டாயமாக்கும் நடைமுறையை அமல்படுத்த குஜராத் அரசு முடிவு செய்துள்ளது.

ராஜ்கோட்டில் நேற்று நடை பெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஆனந்திபென் பட்டேல் செய்தியாளர்களிடம் கூறும்போது, “உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதை கட்டாயமாக்க திட்ட மிடப்பட்டுள்ளது. வரும் மாநகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தலில் இது நடைமுறைப்படுத்தப்படும். வாக்களிக்காதவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்த விதிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்” என்றார்.

எனினும், வாக்களிக்கத் தவறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது எனத் தெரிகிறது. முதல்முறை வாக்களிக்கத் தவறுபவர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் பணி நிமித்தமாக புலம்பெயர்ந்தவர்கள் உள்ளிட்டோருக்கு இந்த சட்டத்தின் கீழ் சிறிய அளவிலான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

இதுகுறித்து, காங்கிரஸ் மூத்த தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான சங்கர்சிங் வகேலா கூறியதாவது:

சட்டப்பேரவையில் பெரும் பான்மை இருப்பதால் வாக்களிப் பதை கட்டாயமாக்கும் மசோதாவை எளிதாக நிறைவேற்றிவிட முடியும். ஆனால், அதன் பின்னணியில் உள்ள பாதகமான அம்சத்தை கருத்தில் கொள்ள வேண்டும். இதுபோன்ற சட்டம் ரஷ்யா உள்ளிட்ட கம்யூனிச நாடுகளில் நடைமுறையில் உள்ளது. ஆனால் இத்தகைய நடைமுறையால் பொதுமக்கள் தேவையின்றி இன்னலுக்கு ஆளாவார்கள்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் நாட்டு மக்களுக்கு வாக்குரி மையை வழங்கி உள்ளது. அதே வேளையில் வாக்களிப்பதா வேண்டாமா என்பதை வாக்கா ளர்களின் முடிவுக்கு விட்டுவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in