காஷ்மீரில் 16 மணிநேர சண்டைக்குப் பிறகு 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீரில் 16 மணிநேர சண்டைக்குப் பிறகு 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
Updated on
2 min read

ஜம்மு காஷ்மீரில் நேற்று முன்தினம் ஊடுருவலை முறியடிக்க ராணுவம் மேற்கொண்ட முயற்சியில் 16 மணிநேர சண்டைக்குப் பிறகு 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம், டங்தார் செக்டார், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்த சண்டை நடந்தது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீவிரவாதிகள் சிலர் பெருமளவு ஆயுதங்களுடன் இந்தியப் பகுதிக்குள் ஊடுருவுவதை ராணுவ வீரர்கள் கண்டனர். இதையடுத்து துப்பாக்கியால் சுட்டு அவர்களை விரட்ட முயன்றபோது இருதரப்பு மோதல் ஏற்பட்டது. இதில் தீவிர வாதிகள் அப்பகுதியில் இருந்த 2 வீடுகளில் தஞ்சமடைந்தனர். பிறகு அங்கிருந்து தாக்குதலை தொடங்கினர். இவர்களை எதிர்த் துப் போரிட ராணுவத்தின் தரப்பில் 40 காமாண்டோ வீரர்களும் ஹெலிகாப்டர் மூலம் வரவழைக்கப்பட்டனர்.

தீவிரவாதிகள் தரப்பில் பெரு மளவு வெடிபொருட்களும் இருந்த தால், ராணுவத்தின் தாக்குதலில் அந்த வீடுகளில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு ஏற்பட்டது.

இதன் பிறகு சம்பவ இடத்தி லிருந்து 3 தீவிரவாதிகளின் உடல் கள் மற்றும் ஆயுதங்களை ராணுவத் தினர் மீட்டனர். எனினும் மேலும் ஒரு தீவிரவாதி தப்பியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவரை தேடும் பணி தொடர்கிறது.

டங்தார் செக்டார் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றது கடந்த 1 வாரத்தில் இது இரண்டாவது முறையாகும்.

வடக்கு காஷ்மீரில் கடந்த வாரம் 2 பேரை சுட்டுக்கொன்ற தீவிர வாதிகள், செல்போன் நிறுவன ஊழியர்களை கொல்லப் போவதாக எச்சரிக்கை விடுத்தனர்.

செல்போன் சேவையை முடக் கும் முயற்சியாக சோப்போரில் கடந்த வாரம், “செல்போன் நிறுவனங்கள் தங்கள் சேவையை நிறுத்திக்கொள்ள வேண்டும். செல்போன் டவர்கள் அமைக்க குத்தகைக்கு நிலம் தருவதை நில உரிமையாளர்கள் உடனே நிறுத்த வேண்டும்” என்று எச்சரித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

3 முறை அத்துமீறல்

எல்லையில் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்ட பிறகு பாகிஸ்தான் படையினர் சண்டை நிறுத்த உடன்பாட்டை மீறி நேற்று 3 முறை தாக்குதல் நடத்தினர். இதில் எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) வீரர் ஒருவர் காயம் அடைந்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டம், ஹிராநகர் செக்டார், சர்வதேச எல்லைப் பகுதி யில் நேற்று காலை 11.20 மணி யளவில் பாகிஸ்தான் படையினர் திடீர் தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து பிஎஸ்எப் வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தான் தாக்குதலில் காய மடைந்த ஏ.கே.ராபா, ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார்.

பாகிஸ்தான் படைகள் நேற்று அதிகாலை தொடங்கி நடத்திய 3-வது தாக்குதல் இதுவாகும். முன்னதாக நேற்று அதிகாலை 12.05 மணிக்கு, பூஞ்ச் மாவட்டம், கிருஷ்ண காட்டி செக்டார், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தினர்.

பாகிஸ்தான் படையினர் இதே வகை தாக்குதலை நேற்று காலை 6 மணியளவில் மீண்டும் நடத்தி னர்.

இந்தியத் தரப்பில் இவற் றுக்கு பதில் தாக்குதல் நடத்தப் படாவிட்டாலும், இந்திய வீரர்கள் அதிகபட்ச விழிப்புடன் பணியாற்றி வருவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in