

தில்கா மாஞ்சி பாகல்பூர் பல்கலைக்கழகத்தில் டெல்லி முன்னாள் சட்ட அமைச்சர் ஜிதேந்திர சிங் தோமருக்கு ஒதுக்கிய பதிவெண் நிரப்பப்பட்ட விண்ணப்படிவம் காணாமல் போயுள்ளது தோமர் மீதான போலி கல்விச்சான்றிதழ் வழக்கை விசாரிக்கும் போலீஸார் நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது.
தோமரின் பட்டப்படிப்பு, சட்டப் படிப்புசம்பந்தமான சான்றிதழ்கள் போலி என குற்றம் சாட்டப்பட் டுள்ளது.இந்த புகாரை அடுத்து அமைச்சர் பதவி விலகினார் தோமர். அவர் மீதான குற்றச்சாட்டு கள் தொடர்பாக விசாரணையை தொடர டெல்லி போலீஸ் துணை ஆணையர் பிரமோத்சிங் குஷ்வஹா உள்ளிட்டோர் அடங்கிய 15 உறுப்பினர் போலீஸ்குழு நேற்று பாகல்பூர் வந்தது.
பல்கலைக்கழக தேர்வுத்துறை யுடன் தொடர்புடைய 5 பிரிவுகள் சார்ந்த ஆவணங்களை போலீஸார் தேடியபோது தோமரின் முக்கிய விண்ணப்பம் மாயமாகி உள்ளது தெரியவந்தது. இது தொடர்பாக பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள், உள் ளிட்ட 6 பேரிடம்போலீஸ் குழு விசாரணை நடத்தியதாக பிஹார் காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
தோமருக்கு பட்டம் வழங்கிய போதுதுணை வேந்தராக இருந்த வரிடமும் விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
வழக்கு சம்பந்தமாக தேவைப் படும் ஆவணங்களை கோரும் போது உடனடியாக தரும்படியும் தவறினால் பல்கலைக்கழக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.
பல்கலைக்கழகத்தில் மேலும் சில தினங்கள் தங்கி போலீஸார் விசாரணை நடத்துவார்கள் என்று தெரிகிறது. டெல்லி திரிநகர் தொகுதி எம்எல்ஏ தோமர். பாகல்பூர் பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற கல்லூரி ஒன்றில் இவர் பெற்ற பட்டச்சான்றிதழ் போலியானது என்று டெல்லி பார் கவுன்சில் புகார் கொடுக்கவே விசராணை மேற்கொண்டு ஜூன் 9ம் தேதி தோமர் கைது செய்யப்பட்டார்.
தோமருக்கு போலி பட்டச்சான்று வழக்கில் ஞாயிற்றுக்கிழமை ஜாமீன் கிடைக்கவில்லை. அவரை 14 நாள் நீதிமன்றக்காவலில்வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தர விடவே திஹார்சிறையில் அடைக்கப்பட்டார்.