சத்தீஸ்கரில் மோதல் பெண் நக்ஸல் பலி

சத்தீஸ்கரில் மோதல் பெண் நக்ஸல் பலி
Updated on
1 min read

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருடன் நேற்று நடைபெற்ற மோதலில் பெண் நக்ஸலைட் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சத்தீஸ்கரின் மாவோயிஸ்ட் ஆதிக்கம் மிகுந்த பீஜப்பூர் மாவட்டத்தில், மிர்ட்டூர், ஜங்லா, கங்கலூர் ஆகிய காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வனப் பகுதியில் பாதுகாப்பு படை யினர் நேற்று முன்தினம் நக்ஸலைட் டுகளை தேடும் பணியில் ஈடுபட் டனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை மிர்ட்டூர் காவல் எல்லைக்குட்பட்ட பெச்சாபால் என்ற கிராமத்தின் அருகே நக்ஸல் முகாம் ஒன்றை கண்ட பாதுகாப்பு படையினர், அதை சுற்றிவளைக்க முயன்றனர்.

அப்போது பாதுகாப்பு படையினருடன் மோதலில் ஈடுபட்ட நக்ஸலைட்டுகள், சிறிது நேரத்தில் வனப் பகுதியில் தப்பியோடி விட்டனர்.

பின்னர் அந்த இடத்தை சோதனையிட்டபோது, அங்கு நக்ஸல் சீருடையில் ஒரு பெண் இறந்துகிடந்தார். 1 துப்பாக்கி, 1 ஒயர்லெஸ் செட் மற்றும் 2 கையெறி குண்டுகள் அங்கு கிடந்தன. பாதுகாப்பு படையினர் அவற்றை கைப்பற்றினர்.

பாதுகாப்பு படையினர் அப்பெண்ணின் உடலுடன் தங்கள் முகாமுக்கு திரும்பிய பிறகே அப்பெண்ணின் அடையாளம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in