கோவிந்தராஜ சுவாமி கோயிலில் புஷ்ப யாகம்

கோவிந்தராஜ சுவாமி கோயிலில் புஷ்ப யாகம்
Updated on
1 min read

திருப்பதியில் உள்ள புகழ் பெற்ற கோவிந்தராஜ சுவாமி கோயிலில் நேற்று புஷ்ப யாக நிகழ்ச்சி நடைபெற்றது.

இக்கோயிலில் சமீபத்தில் பிரம்மோற்சவ விழா நடைபெற்றது. ஆகம விதிகளின்படி, பிரம்மோற்சவ விழாவில் அறிந்தோ, அறியாமலோ ஏதாவது தவறுகள் நடந்திருந்தால், உற்சவ மூர்த்திகளுக்கு புஷ்ப யாகம் நடத்துவது ஐதீகம். இதையொட்டி நேற்று புஷ்ப யாக நிகழ்ச்சி நடைபெற்றது.

நேற்று காலை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜ பெருமாளுக்கு திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் 5 டன் எடை கொண்ட ரோஜா, சம்பங்கி உள்ளிட்ட 16 வகை மலர்களால் புஷ்ப யாக நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் திருமலை - திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ், தேவஸ்தான அதிகாரிகள், வேத பண்டிதர்கள், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மாலையில் உற்சவர்களின் வீதியுலா நடைபெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in