

செல்வங்களை சேர்த்து பெருமை கொள்வதைவிட மரங்களை வளர்த்து பெருமிதம் கொள்ளுங்கள் என உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடி, இன்று தனது இல்லத்தில் மரக்கன்று நட்டார். மரம் நடுவிழாவை ஒட்டி பேசிய பிரதமர், "செல்வங்களை சேர்த்து பெருமை கொள்வதைவிட மரங்களை வளர்த்து பெருமிதம் கொள்ளுங்கள். அன்னை பூமியை அழிவில் இருந்து காப்பாற்ற இயற்கையோடு இணைந்து வாழ்வதே சிறந்தது" என்றார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் கலந்து கொண்டார்.