விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கு வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு பரிசீலனை

விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கு வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு பரிசீலனை
Updated on
1 min read

கடந்த ஓராண்டில் வெங்காயம் விலை 40 சதவீதம் வரை அதிகரித் துள்ள நிலையில், அதன் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற் காக இறக்குமதி செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

சமீப காலமாக டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட பெரு நகரங் களில் வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நுகர்வோர் நலத் துறை அமைச் சகத்தின் புள்ளிவிவரப்படி கடந்த ஓராண்டுக்கு முன்பு டெல்லியில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.24 ஆக இருந்தது. இது ரூ.34 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரம் கூறும்போது, “அனைத்து துறை அமைச்சக செயலாளர்கள் குழுவின் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் வெங்காயத் தின் விலை உயர்வு குறித்து விவா திக்கப்பட்டது. விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், சந்தையில் சப் ளையை அதிகரிக்கவும் வெங்கா யத்தை இறக்குமதி செய்வது குறித்து பரிசீலிக்குமாறு வர்த்தக அமைச்சகம் பரிந்துரை செய்தது” என்றனர்.

வெங்காயம் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவதற்காக, டன்னுக்கு ரூ.15,750 ஆக இருந்த அதன் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை மத்திய அரசு கடந்த வாரம் ரூ.26,775 ஆக அதிகரித்தது. இதனால் ஏற்றுமதி செய்வது குறைந்தது.

இதுகுறித்து, நாசிக் வர்த்தகர் கூறும்போது, “வெங்காயம் அதிக அளவில் உற்பத்தியாகும் மகாராஷ் டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்க ளில் கடந்த மார்ச் மாதம் பெய்த பருவம் தவறிய மழையால் வெங்காய உற்பத்தி பாதிக் கப்பட்டு சந்தைக்கு வரத்து குறைந்தது. இதனால் அதன் விலை படிப்படியாக அதிகரித்து வருகிறது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in