

ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு உதவியதாக சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பதவி விலகக்கோரி ஆம் ஆத்மி கட்சியின் இளைஞர் அணியினர் சுஷ்மா வீட்டின் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் சுமார் 300 பேர் கலந்து கொண்டனர். கட்சியின் இளைஞர் அணி டெல்லி கிளையின் தலைவர் அங்குஷ் கார்க், பாலம் தொகுதி எம்எல்ஏ பவ்னா கவுர் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தை முன்னின்று நடத்தினர்.
லலித் மோடிக்கு உதவிய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர். சர்வதேச யோகா தினத்துக்காக சுஷ்மா அமெரிக்காவின் நியூயார்க் நகருக்குச் சென்றுள்ளதால் அவர் வீட்டில் இல்லை.
ஆர்ப்பாட்டக்காரர்கள் யாரை யும் போலீஸார் கைது செய்யவில்லை. அவர்கள் அனைவரையும் பஸ்களில் ஏற்றி ரேஸ்கோர்ஸ் மெட்ரோ ரயில் நிலையம் அருகே போலீஸார் இறக்கிவிட்டனர்.