

வரவிருக்கும் பிஹார் சட்ட மன்றத் தேர்தலில் தனது கட்சி முழு பலத்துடன் போட்டியிடும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ள தாவது:
பிஹாரில் பகுஜன் சமாஜ் கட்சி தனக்கான வேர்களைக் கொண்டிருக்கிறது. அங்கு எம்.எல்.ஏ. இடங்களை வென்றிருக் கிறோம். அரசியல் கட்சியாக மட்டு மல்லாமல் ஓர் இயக்கமாகவும் பகுஜன் சமாஜ் உள்ளதால், அது நிச்சயம் பிஹார் தேர்தலில் எதிரொ லிக்கும். முழு வலிமையோடு இந்தத் தேர்தலை பகுஜன் சமாஜ் சந்திக்கும்.
பிஹாரில் பெரும்பாலானவர் கள் தலித்துகளாகவும், முஸ்லிம் களாகவும் உள்ளனர். அவர்களில் பலர் கல்வி ரீதியாகவோ, சமூக ரீதியாகவோ அல்லது அரசியல் ரீதியாகவோ நல்ல நிலையில் இருக்கவில்லை.
இவர்களின் மேம் பாட்டுக்காக, உத்தரப் பிரதேசத் தில் நான் மேற்கொண்ட நடவடிக் கைகள் அளவுக்கு இங்கு இருக் கும் அரசுகள் எந்த ஒரு முயற்சி யையும் மேற்கொள்ளவில்லை.
தலித்துகளும், முஸ்லிம் களும் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தால், அம்பேத்கர் கனவு கண்ட சமுதாயத்தை உருவாக்க முடியும் என்றார்.