

அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு வரும் ஜூலை 25-ம் தேதி மீண்டும் நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
கடந்த மே 3-ம் தேதி நடைபெற்ற மருத்துவ நுழைவுத் தேர்வில் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், மீண்டும் நுழைவுத் தேர்வு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த ஆண்டு மருத்துவ நுழைவுத் தேர்வுக்காக 6.3 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர்.
“உச்ச நீதிமன்ற உத்தரவுக் கிணங்க வரும் ஜூலை 25-ம் தேதி மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்தப்படும். புதிதாக விண்ணப்பங்கள் ஏற்கப் படமாட்டாது. கடந்த டிசம்பர் 1-ம் தேதி முதல் 2015 ஜனவரி 31-ம் தேதி வரை உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தவர்கள் மட்டுமே மறு தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்” என சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
விண்ணப்பத்தை சமர்ப்பிக் கும்போது அளித்த மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் செயல்படுவதை உறுதி செய்து கொள்ளும்படி மாணவர்களை சிபிஎஸ்இ கேட்டுக் கொண் டுள்ளது.
இதுதொடர்பான விவரங்கள் www.aipmt.nic.in. என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.