மும்பை விஷச்சாராய பலி 41 ஆக அதிகரிப்பு: 8 போலீஸார் நீக்கம்

மும்பை விஷச்சாராய பலி 41 ஆக அதிகரிப்பு: 8 போலீஸார் நீக்கம்
Updated on
1 min read

மும்பையில் விஷச்சாராயத்தைக் குடித்து பலியானோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 24 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இது தொடர்பாக 8 போலீஸார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து 2 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மும்பை போலீஸ் செய்திதொடர்பாளர் தனஞ்சய் குல்கர்ணி கூறும்பொது, "கடந்த புதன்கிழமை மும்பை மலாட் புறநகர் பகுதிக்கு உட்பட்ட லக்‌ஷ்மி நகர் சேரிப்பகுதியில் கள்ளச்சாரயம் குடித்து பலர் பாதிக்கப்பட்டனர். உடனடியாக அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 13 பேர் நேற்று பலியாகினர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை மேலும் 12 பேர் பலியாகினர். பிற்பகலில் மேலும் 8 பேர் பலியாகினர். மொத்த பலி எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 10 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கள்ளச்சாராயம் விற்றது தொடர்பாக இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கிரிமினல் தண்டனைச் சட்டப் பிரிவுகள் 304, 328, 34 ஆகியனவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் ராஜூ ஹன்மந்த பஸ்கார்(50), டொனால்ட் ராபர்ட் படேல்(47) கவுதம் ஹரே(30) என அடையாளம் காணப்பட்டுள்ளது" என்றார்.

இதற்கிடையில், கள்ளச்சாராயம் குடித்து 33 பேர் பலியான தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொண்டு 2 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in