மேகியை பரிசோதிக்க தமிழகம், பஞ்சாப், தெலங்கானா முடிவு

மேகியை பரிசோதிக்க தமிழகம், பஞ்சாப், தெலங்கானா முடிவு
Updated on
1 min read

மேகியில் மோனோசோடியம் குளூட்டாமேட் மற்றும் ஈயம் போன்ற வேதிப்பொருட்கள் வரையறுக்கப்பட்ட வரம்புக்குள் இருக்கிறதா என்ற பரிசோதனையை மேற்கொள்ள தமிழகம், பஞ்சாப், தெலங்கானா ஆகிய மாநிலங்கள் முடிவு செய்துள்ளன.

நெஸ்லே நிறுவனத்தின் நூடுல்ஸான மேகி மீது பல்வேறு மாநிலங்களிலும் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றன. உத்திரப் பிரதேசம் மற்றும் கேரளாவில் ஏற்கெனவே சில்லறை விற்பனைச் சந்தையிலிருந்து மேகி திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை, மேகி சாம்பிள்களை சேகரித்து தமிழகம் முழுதும் உள்ள சோதனைச் சாலைகளுக்கு அனுப்பும் நடைமுறையை ஏற்கெனவே தொடங்கி விட்டது. பஞ்சாப், தெலங்கானா மாநிலங்களும் மேகி சாம்பிள்களை சேகரித்து சோதனைச் சாலைகளுக்கு அனுப்பத் தொடங்கியுள்ளது.

மேகியில் மோனோசோடியம் குளூட்டாமேட் மற்றும் காரீயம் வரையறுக்கப்பட்ட வரம்புக்கும் அதிகமாக இருந்தால் நிச்சயம் நடவடிக்கை உறுதி என்று பஞ்சாப் பாஜக எம்.எல்.ஏ. ஜயானி தெரிவித்தார். ஆனால், நெஸ்லே இந்தியா நிறுவனமோ தங்களது மேகி நூடுல்ஸ் பாதுகாப்பானதே என்று கூறிவருகிறது.

இதனிடையே, மேகி நூடுல்ஸ் விவகாரத்தில் சிக்கித் தவிக்கும் நெஸ்லே நிறுவனத்தின் பால்பவுடரில் உயிருடன் புழுக்கள் இருப்பது, கோவையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது. | விவரம்:>நெஸ்லே பால்பவுடரில் உயிருடன் புழுக்கள்: கோவை பரிசோதனையில் அதிர்ச்சித் தகவல் |

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in