

தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை கொலீஜியம் முறையில் தேர்ந் தெடுக்க தலைமை தேர்தல் ஆணை யர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு, தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜெய்தி அளித்த பேட்டியின்போது கூறியதாவது:
தற்போது தேர்தல் ஆணையர் களை தேர்வு செய்யும் நடைமுறை மற்றும் 3 நபர் தேர்தல் ஆணையம் சிறந்த முறையில்தான் செயல்பட்டு கொண்டிருக்கிறது. எனினும், எல் லோரும் ஒருமனதாக முடிவு செய் தால், இதற்கு மாற்றாக கொலீஜியம் முறையில் கலந்தாலோசித்து தலைமை தேர்தல் ஆணையர், மற்ற 2 ஆணையர்களை தேர்வு செய்யும் முறையைக் கொண்டு வரலாம். அதன்மூலம் தேர்தல் ஆணையம் இன்னும் சிறப்பாக செயல்படும். அத்துடன், ஆணை யர்களை பதவி நீக்கம் செய்யும் விஷயத்தில் 3 ஆணையர் களுக்கும் சமமான பாதுகாப்பு வழங்க வேண்டும்.
என் அனுபவத்தில், 3 நபர் குழு தேர்தல் ஆணையர்களை தேர்ந் தெடுப்பது சிறந்தது. ஏனெனில், குழுவில் உள்ள 3 பேர் நன்கு ஆலோசனை செய்து, தங்கள் அறிவைப் பயன்படுத்தி தேர்தல் ஆணையர்களை நியமிக்க முடியும். இவ்வாறு நசீம் ஜெய்தி கூறினார்.
‘‘தலைமை தேர்தல் ஆணையர் உட்பட 3 ஆணையர்களை, 3 நபர் அடங்கிய கொலீஜியம் பரிந்துரை யின் அடிப்படையில் குடியரசு தலைவர் தேர்வு செய்யலாம்’’ என்று சமீபத்தில் மத்திய சட்ட ஆணையம் பரிந்துரை செய்திருந் தது. இதற்கு ஆதரவு தெரிவித்து தலைமை தேர்தல் ஆணையர் நசீம் பேட்டி அளித்துள்ளது குறிப் பிடத்தக்கது. இந்த கொலீஜியத்தில் பிரதமர், நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவர், இந்திய தலைமை நீதிபதி ஆகியோர் இடம்பெற வேண்டும் என்று சட்ட ஆணையம் பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், ‘தேர்தல் ஆணையர்களை பதவி நீக்கம் செய்யும் விஷயத்தில், எல்லா ஆணையர்களுக்கும் சமமான சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று இதற்கு முன்பு பதவி வகித்த தலைமை தேர்தல் ஆணையர்கள் வலியுறுத்தி வந்தார்கள். அதுபற்றி உங்கள் கருத்து என்ன?’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப் பினர். அதற்கு நசீம் ஜெய்தி பதில் அளிக்கையில், ‘‘எனக்கு முன்பு பதவி வகித்த தேர்தல் ஆணையர் களின் கருத்தில் எனக்கு முழு உடன்பாடு உண்டு’’ என்றார்.
தற்போது தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர் களை அரசே நியமிக்கிறது. தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய நாடாளு மன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டு வரவேண்டும். மற்ற தேர்தல் ஆணையர்களை தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் பேரிலோ அல்லது தானாகவோ அரசே பதவி நீக்கம் செய்யலாம். இந்த நடைமுறையை மாற்றி எல்லா ஆணையர்களுக்கும் ஒரே மாதிரியான சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நசீம் வலியுறுத்தினார்.