குற்றச்சாட்டுகளுக்கு சுஷ்மா, வசுந்தரா விளக்கம் தரவேண்டும்: திக்விஜய் சிங் கோரிக்கை

குற்றச்சாட்டுகளுக்கு சுஷ்மா, வசுந்தரா விளக்கம் தரவேண்டும்: திக்விஜய் சிங் கோரிக்கை
Updated on
1 min read

லலித் மோடி விவகாரத்தில் சுஷ்மா ஸ்வராஜ், வசுந்தரா ராஜே ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐ.பி.எல். நிதி முறைகேடுகள் தொடர்பாக லலித் மோடியை தேடப்படும் குற்றவாளியாக அமலாக்கத் துறை அறிவித்துள் ளது. இந்நிலையில் சுஷ்மா கடந்த ஆண்டு அக்டோபரில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் விழாவில் பங்கேற்க லண்டன் சென்றிருந் தார். கென்சிங்டன் என்ற ஹோட்ட லில் அவர் தங்கினார். அப்போது ஹோட்டல் உரிமையாளர் ஜோகிந்தர் சேங்கர் அளித்த விருந்தில் சுஷ்மா பங்கேற்றார்.

இந்நிலையில் இந்த விருந்தில் லலித் மோடியை சுஷ்மா சந்தித்துப் பேசியதாக தனியார் தொலைக் காட்சியில் செய்தி வெளியானது. ஆனால் லண்டனில் உள்ள இந்தியத் தூதர் ரஞ்சன் மத்தாய் அழைக்கப்படவில்லை என்றும் செய்தி வெளியானது.

இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “லண்டனில் தூதரக அதிகாரிகள் எவரும் இல்லாமல் லலித் மோடியை சந்தித்து பேசியது உண்மையா என்று சுஷ்மா விளக்கம் அளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

“கடந்த 2011-ம் ஆண்டு பிரிட்ட னில் தங்குவதற்காக லலித் மோடி அளித்த விண்ணப்பத்துக்கு பரிந் துரை செய்தது உண்மையா என ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே விளக்கம் அளிக்க வேண்டும்” என்றும் திக்விஜய் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in