

போலி பட்டப்படிப்பு சான்றிதழ் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கோவா மாநில ஆளுநர் மிருதுளா சின்ஹா, மோசமானவைகள் சமூகத்திலிருந்து அகற்றப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
கோவா பொதுப்பணித் துறை அமைச்சர் சுதின் தவாலிகர், தனது வேட்பு மனு தாக்கலின்போது அளித்த பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள கல்வித் தகுதி போலியானது என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக ஆளுநர் மிருதுளா சின்ஹாவிடம் கேட்ட போது அவர், “உலகில் மோசமானவைகள் ஏராளம் உள்ளன. ஆனால், அரிசியிலிருந்து கற்களைப் பொறுக்கி அவற்றைப் பெண்கள் அப்புறப்படுத்துவது போல, சமூகத்தை மாசுபடுத்துபவற்றை அப்புறப்படுத்த வேண்டும்” என்றார்.