மத்திய அரசின் மீன்பிடி தடையை புறக்கணிக்கிறது கேரள அரசு: 47 நாட்கள் மட்டும் அமல்படுத்த முடிவு

மத்திய அரசின் மீன்பிடி தடையை புறக்கணிக்கிறது கேரள அரசு: 47 நாட்கள் மட்டும் அமல்படுத்த முடிவு
Updated on
1 min read

மீன்பிடி தடைக்காலத்தை 61 நாட்களாக நீட்டித்து அறிவித்த மத்திய அரசின் உத்தரவை கேரள அரசு புறக்கணித்துள்ளது. வழக்கமாக விதிக்கப்படும் 47 நாட்கள் தடைக்காலத்தை மட்டும் அமல்படுத்த முடிவு செய்துள்ளது. இதனால், கேரள மீனவர்கள் நேற்று வழக்கம்போல் மீன்பிடிக்கச் சென்றனர்.

கேரள எல்லையில் உள்ள அரபிக் கடலின் ஆழ்கடல் பகுதி யில் ஜூன் 1-ம் தேதி முதல் ஜூலை 31-ம் தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடிக்கத் தடை விதித்து மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டது.

இந்த அறிவிப்புக்கு கேரள அரசும் மீனவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து நாட்டுப் படகு மீனவர்கள் கரை யோர பகுதிகளில் மீன்பிடித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு கட்டுப்பாட்டைத் தளர்த்தியது. ஆனால், தடையை முழுமையாக விலக்கிக்கொள்ள கேரளம் வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், நேற்று (ஜூன் 1-ம் தேதி) மத்திய அரசு அறிவித்தபடி 61 நாள் மீன்பிடி தடைக்காலத்தை கேரள அரசு அமல்படுத்தவில்லை. வழக்கம்போல ஜூன் 15-ம் தேதி முதல் ஜூலை 31-ம் தேதி வரை 47 நாட்கள் மட்டுமே தடைக்காலம் என கேரளத்தை ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு அறிவித் துள்ளது. இதனை கேரள மீன்வளத் துறை அமைச்சர் கே. பாபு உறுதி செய்துள்ளார். மேலும், “நாட்டுப் படகு மீனவர்கள் இந்த தடைக் காலத்தில் 12 கடல் மைல் எல்லை வரை மீன்பிடிக்க அனுமதிக்கப் படுவர்” எனவும் தெரிவித்துள்ளார்.

கேரள மீன்வள ஒருங்கிணைப் புக் குழு தலைவர் வி. தினகரன் கூறும்போது, “இந்த நாட்டின் கடல் எல்லையில் மீன்பிடிக்கும் உரிமை மீனவர்களுக்கு உண்டு. அவர்களைத் தடுப்பதற்குப் பதிலாக வெளிநாட்டு மீன்பிடி படகு களை இந்திய கடல் எல்லையில் மீன்பிடிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

கேரள மீன்பிடி படகுகள் இயக்கு பவர் சங்க செயலாளர் ஜோசப் சேவியர் கலப்புரக்கல் கூறும்போது, “அனைத்து படகுகளும் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றுவிட்டன. வரும் 14-ம் தேதிதான் அவை திரும்பும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in