ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த வழக்கில் மேக்திக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை: பெங்களூரு நீதிமன்றத்தில் 37 ஆயிரம் பக்கங்கள் தாக்கல்

ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த வழக்கில் மேக்திக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை: பெங்களூரு நீதிமன்றத்தில் 37 ஆயிரம் பக்கங்கள் தாக்கல்
Updated on
1 min read

ட்விட்டர் சமூக வலைதளத்தில் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்ததாக பெங்களூருவில் கைது செய்யப்பட்ட மேக்திக்கு எதிராக சுமார் 37 ஆயிரம் பக்க அளவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஈரான், இராக், சிரியா உள்ளிட்ட நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐஎஸ் தீவிர வாத அமைப்புக்கு பெங்களூரு வில் ஆள் சேர்த்ததாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மேக்தி பிஸ்வாஸ் மஸ்ரூர் ( 24 ) என்ற பொறியாளர் கடந்த ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து அவர் மீது இந்திய தண்டனைச்சட்டம் 121-வது பிரிவின்படி நாட்டுக்கு எதிராக போர் தொடுத்தல் உள்ளிட்ட 6 கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மேக்தியின் பெற்றோரும் நண்பர்களும் மேக்தி மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வருகின்றனர்.

பெங்களூரு குற்றப்பிரிவு போலீஸார் நடத்திய விசாரணை யில் மேக்தி 'ஷமிவிட்னஸ்' என்ற பெயரில் ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் ஐஎஸ் தீவிர வாத அமைப்புக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான பதிவுகளை மேற்கொண்டதும், அதை பல நாடுகளைச் சேர்ந்த ஐஎஸ் ஆதரவாளர்கள் பின் தொடர்ந்த‌தும் தெரியவந்தது.

இதையடுத்து பெங்களூரு குற்றப்பிரிவு போலீஸார் கர்நாடகா, ஆந்திரா, மும்பை, டெல்லி, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பல இடங்களில் தீவிர விசாரணை நடத்தினர். மேக்தி கைதாகி 6 மாதங்கள் ஆன நிலையில் அவருக்கு எதிராக 36 ஆயிரத்து 986 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை பெங்களூரு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இதில் மேக்தியின் ட்விட்டர் பதிவுகள் பற்றிய தகவல்கள் 10 ஆயிரத்து 850 பக்கங்களிலும், பகிரப்பட்ட படங்கள் பற்றி 15 ஆயிரத்து 446 பக்கங்களிலும் விவரிக்கப்பட்டுள்ளன. இந்த இரு அம்சங்களைப் பற்றி 1,451 பக்கங்களில் ஆராயப்பட்டுள்ள தாக தகவல் வெளியாகியுள்ளது.

மேக்தியின் வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட்டுள்ளதால் இவ்வழக்கு இனி வேகமெடுக்கும். அநேகமாக அடுத்த மாதத்திலிருந்து விரைவு நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கும் என பெங்களூரு மாநகர குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in