Published : 13 Jun 2015 08:25 am

Updated : 13 Jun 2015 08:25 am

 

Published : 13 Jun 2015 08:25 AM
Last Updated : 13 Jun 2015 08:25 AM

யோகா.. மதம் சார்ந்ததல்ல, மனம் சார்ந்தது

இந்திய பள்ளிகளில் உடற்பயிற்சியை கண்டிப்பாக கடைப்பிடிக்கும் விஷயமாக மாற்றினால் சிறப்பாக இருக்கும் என்பதே எனது கருத்து. முக்கியமாக யோகாசனப் பயிற்சி வேண்டும்.

கல்வியாளர் வெண்டி டோனிகர் யோகா குறித்து எழுதும்போது, தற் காலத்தில் பயிற்றுவிக்கப்படும் யோகாசனம், தொன்மை வாய்ந்தது அல்ல, சமீபகாலத்தில் மேம்படுத்தப் பட்டதுதான். பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரத்தில் இப்போது கற்பிக் கப்படும் பல ஆசன முறைகள் இல்லை என்று கூறியுள்ளார். இப்போதைய யோகா தொன்மை வாய்ந்தது என்பதில் பல்வேறு மாற்றுக் கருத்துகள் உள்ளன. இதில் உண்மை எதுவாக இருந்தா லும், கோடிக்கணக்கான இந்தியர் களுக்கு யோகா எளிதில் வசப்படக் கூடிய ஒன்றாகவே உள்ளது. இப் போதைய நிலையில் இந்தியாவில் ஜிம் பயிற்சியாளர், தடகள பயிற்சி யாளர்களை எளிதில் கண்டுபிடித்து விடலாம். ஆனால் பள்ளிகளில் முறையாக யோகா கற்றுக் கொடுக்க சிறந்த பயிற்சியாளர்கள் கிடைப்பது சற்று கடினமாகவே உள்ளது.


பல ஆண்டுகளுக்க முன்பு வாழும் கலை அமைப்பில் ஒரு பயிலரங்கில் பங்கேற்றபோது யோகாவின் சில முக்கிய பயன்களை கற்றுக் கொண் டேன். உடலுக்கு யோகா பயிற்சி அளிப் பதன் மூலம் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள முடியும் என்பது அதில் முக்கியமானது. அதில் உள்ள மூச்சுப் பயிற்சியும் சிறப்பானது.

நான் யோகா கற்றுக் கொண்டபோது வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் புகைப்படம் யோகா பயிற்சி மையத்தில் அனைவரும் பார்க்கும் படியான இடத்தில் வைக்கப் பட்டிருக்கும். விரும்பமுள்ளவர்கள் அதனை வணங்கலாம், ஆனால் வணங்க வேண்டியது கட்டாயமில்லை. எனக்கு இந்த வணக்கமுறை சவுகர்ய மாக படவில்லை. எனவே நான் அதை கடைப்பிடிக்கவும் இல்லை.

மேலும் எங்களுக்கு யோகா வகுப் பெடுத்த குரு ரவி சங்கரிடம் உங்கள் பெயருக்கு முன்னால் ஏன் இரண்டு ஸ்ரீ போட்டுக் கொள்கிறீர்கள் என்று அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் ஒருவர் கேட்டபோது, “பெயருக்கு முன் னால் மூன்று ஸ்ரீ போட்டுக் கொண்டால் எனக்கு மிகவும் அதிகம். ஒரு  என்பது எனக்கு மிகவும் குறைவு” என்று கிண்டலாக பதிலளித்தார். இதையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சரி, அதைவிடுங்கள்.

எந்த மத நம்பிக்கையையும் சாராமல், யோகாவில் பங்கேற்பதன் மூலம் ஒருவர் யோகாசனத்தின் முழு பயனையும் அடைய முடியும் என் பதையே நான் முக்கியமாக கூற வந்தேன். ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் யோகாசன பயிற்சிகளை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் முதலில் எதிர்ப்புத் தெரிவித்தது. முஸ்லிம் மாணவர்களை இந்து மத சடங்கான சூரிய நமஸ் காரத்தை செய்ய பாரதிய ஜனதா அரசு கட்டாயப்படுத்துகிறது என்றும் அந்த வாரியம் குற்றம்சாட்டியது சர்ச்சை செய்தியானது. இந்த எதிர்ப்பு எனக்கு வருத்தம் தருகிறது. ஏனெனில் சூரிய நமஸ்காரம் என்பது யோகாசனத்தில் அடங்கியதுதான். இது எந்த மதம் எந்த இனத்தைச் சேர்ந்த மனிதர்களுக்கும் சிறந்த மனம் சார்ந்த உடற்பயிற்சிதான். இதில் நேராக நிற்பது, பின்புறமாக வளைவது, குனிவது, உட்கார்ந்து எழுவது உள்ளிட்ட உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்ளும் பயிற்சிகளும் உள்ளன. இது எப்படி மதம் சார்ந்ததாகும். லட்சக்கணக்கான அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் இப்போது சூரிய நமஸ்காரத்துடன் யோகாசனம் செய்கிறார்கள். நல்ல உடற்பயிற்சி என்பதுதான் அதற்கு காரணம். சூரிய நமஸ்காரம் கட்டாய மில்லை என்ற அறிவிப்பு வெளியாகி யுள்ள நிலையில், இந்த விஷயத்தில் சற்று இணக்கத்துடன் நடந்து கொள்ளலாம் என்பது எனது கருத்து.

எனினும் மத்திய ஆட்சியில் உள்ள கட்சியின் பின்னணி, அதில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் சிறுபான்மையினரை குறிவைத்து கூறும் கடுமையான கருத்துகள் போன்றவை, அரசின் அனைத்து நடவடிக்கையையும் சந்தேகக் கண்ணுடன் பார்க்க வைக்கின்றன. அதில்தான் இப்போது யோகாவும் சிக்கிக் கொண்டுள்ளது. பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் யோகா மீது சிறந்த அபிமானம் கொண்டுள்ளார். தினமும் யோகாசனம் செய்யும் அவர், பல்வேறு யோகாசன பயிற்சிகள் செய்வது போன்ற படங்கள் குஜராத்தி பத்திரிகைகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே வெளிவந்துள்ளன.

ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. சபையால் அறிவிக்க வைத்ததும், அதற்கு 175 நாடுகளின் ஆதரவை பெற்றதும் மோடியின் தனிப்பட்ட வெற்றிதான். எனினும் ஆர்வமிகுதியால் பல்வேறு அரசுத் துறையினர் ஜூன் 21-ல் யோகா பயிற்சியை தொடங்க கூறியிருப்பதில் பிரச்சினை உள்ளது. ஏனெனில் அன்று ஞாயிற்றுக்கிழமை, அனைவருக்கும் விடுமுறை தினம்.

அனைவருக்கும் பயனளிக்கும் யோகா திட்டத்தை சர்ச்சையில் இருந்து அரசு வெளியே கொண்டு வர வேண்டும். வளரும் இளம் தலைமுறையினர் யோகாவால் அதிக பயனடைய முடியும். சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் இந்த நன்மை சென்றடைய வேண்டும்.


யோகாசர்வதேச யோகா தினம்மோடி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author