வெளிநாட்டுப் பயணங்களில் ரூ.3.11 லட்சம் பரிசுப் பொருட்கள் பெற்றுள்ளார் மோடி: தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்

வெளிநாட்டுப் பயணங்களில் ரூ.3.11 லட்சம் பரிசுப் பொருட்கள் பெற்றுள்ளார் மோடி: தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்
Updated on
1 min read

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 10 மாதங்களில் தனது வெளிநாட்டுப் பயணத்தின்போது, ரூ.3.11 லட்சம் மதிப்பிலான 65 பரிசுப் பொருட்களை பெற்றுள்ளார்.

தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆர்வலர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவு அமைச்சகம் இந்த பதிலை தந்துள்ளது.

பிரதமர் மோடி கடந்த பிப்ரவரி 19-ம் தேதி தனது வெளிநாட்டுப் பயணத்தில் தங்கம், வைரம் பதித்த ரூ.75 ஆயிரம் மதிப்பிலான பொத்தான்களை பரிசாகப் பெற்றார். இதுதவிர 2 ‘டீ செட்’கள், புத்தகங்கள் அவருக்கு பரிசாக வழங்கப்பட்டன. புத்தர் சிலை ஒன்றையும் அவர் பரிசாக பெற்றார்.

மேலும் கலைப் பொருட்கள், கோயில்களின் மாதிரிகள், ஓவியங்கள், கார்பெட்கள், புகைப்படங்கள், ஆபரணங்கள் என 65 பொருட்களை வெளிநாட்டுப் பயணங்களில் மோடி பரிசாக பெற்றுள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 2010 முதல் 2013 ஜூன் வரை ரூ.83.72 லட்சம் மதிப்பிலான பரிசுப் பொருட்களை பெற்றதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

2010 முதல் 2013 ஜூன் வரை, குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், அரசு அதிகாரிகள் பெற்ற பரிசுகள் தொடர்பான விவரங்களையும் வெளியுறவு அமைச்சகம் தந்துள்ளது. மேலும் 2013 ஜூலை முதல் மார்ச் 2015 வரையிலான விவரங்கள், வெளியுறவு அமைச்சக இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் அரசு அதிகாரிகள் பரிசாகப் பெறும் ரூ.5,000-க்கும் மேல் மதிப்புகொண்ட பொருட்கள் வெளியுறவு அமைச்சக கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in