கலாநிதி மாறன் கடிதத்துக்கு உள்துறை அமைச்சகம் பதிலளிக்காது

கலாநிதி மாறன் கடிதத்துக்கு உள்துறை அமைச்சகம் பதிலளிக்காது
Updated on
1 min read

சன் குழும சானல்களுக்கு பாதுகாப்பு ஒப்புதல் மறுக்கப்பட்டுள்ள நிலையில் கலாநிதிமாறன் எழுதிய கடித்தத்துக்கு உள்துறை அமைச்சகம் பதில் அளிக்காது என்று செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

33 சன்குழும சானல்களுக்கு பாதுகாப்பு ஒப்புதல் வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்ததையடுத்து சன்குழும தலைவர் கலாநிதி மாறன் உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அந்தக் கடிதத்தில் தேச விரோத புகாரோ, கிரிமினல் புகார்களோ எதுவும் இல்லாத நிலையில் சானல்களுக்கு பாதுகாப்பு ஒப்புதலுக்கு மறுப்பு தெரிவிததற்கான நியாயப்பாடு எதுவும் இல்லை என்றும் சன் குழுமம் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பதற்கான முகாந்திரம் இல்லை என்றும், இதனால் ஒப்புதல் வழங்க வேண்டுமாறும் கலாநிதி மாறன் கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் பாதுகாப்பு ஒப்புதல் மறுக்கப்பட்டதற்கான காரணங்களை தாங்கள் ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ள நிலையில் பதில் எழுதும் திட்டம் எதுவும் இல்லை என்ற உள்துறை அமைச்சகத்தின் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்ததாக பிடிஐ செய்தி கூறியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in