மணிப்பூர் மாநிலம் இம்பாலில் உள்ள சந்தைப்பகுதியில் குண்டு வெடித்ததில் 2 பேர் பலியாகியுள்ளனர்.
இன்று மாலை தீவிரவாதிகளால் நடத்தப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படும் இந்தக் குண்டுவெடிப்பில் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
ஷிங்ஜமேய் சந்தைப் பகுதியில் மாலை 5.30 மணியளவில் குண்டு வெடித்தது.