

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையானின் லட்டு பிரசாதம் விலை விரைவில் உயர்த்தப்பட உள்ளது.
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் லட்டு பிரசாதம் 3 அளவுகளில் தயாரிக்கப்படுகிறது. மிக சிறிய லட்டுகள், பக்தர்களுக்கு தரிசனம் முடிந்த பின்னர் இலவச மாக வழங்கப்படுகிறது. சாதாரண லட்டு பிரசாதம் திவ்ய தரிசன பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இவை ரூ.20 வீதம் இரண்டு லட்டுகள் வழங் கப்படுகின்றன. மேலும் அதிகமாக லட்டு பிரசாதங்கள் தேவைப்படும் பக்தர்களுக்கு ஒரு லட்டு ரூ. 25 வீதம், 4 லட்டுகள் வழங்கப்படுகின்றன. கல்யாண உற்சவ லட்டு பிரசாதம் எனப்படும் பெரிய லட்டுகள் சேவை டிக்கெட்கள் பெற்ற பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன.
ஒரு லட்டு தயாரிக்க தேவஸ் தானத்துக்கு ரூ.13 செலவாகிறது. தினமும் 1.5 லட்சம் லட்டு பிரசாதங்கள் விநியோகிக்கப்படு கின்றன. தற்போது லட்டு விலையை உயர்த்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இது குறித்து தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சதலவாடா கிருஷ்ண மூர்த்தி மேலும் கூறும்போது, “லட்டு தயாரிக்க உபயோகப்படுத்தும் மூலப்பொருட்களின் விலை அதிக ரித்துள்ளது. இருப்பினும் கடந்த 15 ஆண்டுகளாக லட்டு விலையை அதிகரிக்கவில்லை” என்றார்.