ரூ.41 ஆயிரம் கோடியில் டெல்லி பட்ஜெட் தாக்கல்

ரூ.41 ஆயிரம் கோடியில் டெல்லி பட்ஜெட் தாக்கல்
Updated on
1 min read

ரூ.41 ஆயிரத்து 129 கோடியில் டெல்லி மாநில பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இது ஆம் ஆத்மி அரசின் முதல் முழுமையான பட்ஜெட்.

இதில் கல்வித்துறைக்கு மட்டும் 9 ஆயிரத்து 836 கோடி ரூபாய் ஒதுக்கப்பட் டுள்ளது. கல்வித்துறைக்கு கடந்த பட்ஜெட்டைவிட 106 சதவீதம் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. துணை முதல்வரும், நிதியமைச்சருமான மனிஷ் சிசோடியா பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது சுதந்திரமான பட்ஜெட் என்று சிசோடியா அப்போது குறிப்பிட்டார். டெல்லியில் கல்வித் தரத்தை உயர்த்துவோம் என்று வாக்குறுதி அளித்தோம். அதனை நிறைவேற்றும் வகையில் அத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளோம் என்றும் சிசோடியா தெரிவித்தார்.

பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு ரூ.4 ஆயிரத்து 787 கோடி, போக்குவரத்துத் துறைக்கு ரூ.5 ஆயிரத்து 85 கோடி, மின்சாரம் மற்றும் நீர் வசதிக்கு ரூ.1,690 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மின்சாரம், நீருக்கு பெருமளவில் மானியம் வழங்கப்படும் என்பது ஆம் ஆத்மியின் தேர்தல் வாக்குறுதியாகும்.

கடந்த பட்ஜெட்டின் போது டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சி இருந்தது. அப்போது மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ரூ.36 ஆயிரத்து 776 கோடி மதிப்பிலான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in