

சீமாந்திராவில் உள்ள 13 மாவட்டங்களை 25 மாவட்டங்களாக பிரிக்க சந்திரபாபு நாயுடு முடிவு செய்துள்ளார்.
சீமாந்திராவின் முதல் முதல்வராக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு வரும் 8 அல்லது 9-ம் தேதி பதவியேற்க உள்ளார். அவர் டில்லியில் உள்ள ஆந்திர பவனில் தனது கட்சி எம்.பி.க்களுடன் மாநில வளர்ச்சி பணிகள் மற்றும் சீமாந்திராவில் உள்ள 13 மாவட்டங்களை விரிவாக்குதல் போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதில், தற்போது சீமாந்திராவில் உள்ள 13 மாவட்டங்களை, மக்களவை தொகுதிகளின் அடிப்படையில் 25 மாவட்டங்களாக பிரிக்க ஆலோசனை நடத்தினார். புதிய மாநிலத்தின் தலைநகரை நிர்மாணிக்க மத்திய அரசிடமிருந்து அதிக அளவில் நிதி பெற வேண்டுமென தீர்மானிக்கப் பட்டது. மாநிலத்தை விரிவு படுத்துவதில் சம்பந்தப்பட்ட எம்.பி-கள் தலைமையில் ஒரு குழு அமைத்து அந்த பகுதியில் தேவையான வசதிகள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.