போலி கல்வித் தகுதி: சிக்கலில் மகாராஷ்டிர பாஜக அமைச்சர்

போலி கல்வித் தகுதி: சிக்கலில் மகாராஷ்டிர பாஜக அமைச்சர்
Updated on
1 min read

மகாராஷ்டிர மாநில நீர்வழங்கல் துறை அமைச்சர் பபன்ராவ் லோனிகர் தனது வேட்பு மனுவில் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் படித்தது 5-வது வரை மட்டுமே என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

பாஜக அமைச்சர் பபன்ராவ் லோனிகர் தன்னுடைய 2004 மற்றும் 2009 வேட்பு மனுவில் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு என்று தனது கல்வித்தகுதியை குறிப்பிட்டிருந்தார். ஆனால் 2014-ம் ஆண்டு தேர்தல் வேட்பு மனுவில் 5-ம் வகுப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.

பபன்ராவ் லோனிகர் வேட்பு மனுக்களின் நகல்களை மும்பையில் தாக்கல் செய்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சச்சின் சாவந்த், “2004 மற்றும் 2009 தேர்தல் வேட்பு மனுக்கலில் லோனிகர் தனது கல்வித்தகுதியை முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு, அதாவது யஷ்வந்த்ராவ் சவான் மகாராஷ்டிரா திறந்தவெளி பல்கலைக் கழகத்தில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்ததாக குறிப்ப்பிட்டுள்ளார். ஆனால் 2014-ம் ஆண்டு தனது கல்வித் தகுதியை 5-ம் வகுப்பு என்று குறிப்பிட்டுள்ளார்” என்று தெரிவித்தார்.

மேலும் லோனிகர் பி.ஏ. பட்டப்படிப்பு முடித்துவிட்டதாக கோரும் இன்னொரு ஆவணத்தையும் சச்சின் சாவந்த் தாக்கல் செய்தார்.

“முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அவர் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், டெல்லி சட்ட அமைச்சர் விவகாரத்தில் மேற்கொண்ட அதே நடவடிக்கையை லோனிகர் மீதும் எடுக்க வேண்டும்” என்று சச்சின் சாவந்த் வலியுறுத்தினார்.

இது குறித்து லோனிகரிடம் கேட்ட போது, “நான் எனது பட்டப்படிப்பை முடிக்கலாம் என்றே கருதியிருந்தேன். 1991-ம் ஆண்டு எனக்கு பி.ஏ. முதலாம் ஆண்டு இடம் கிடைத்தது. ஆனால் அரசியல் பணிகளின் நெருக்கடிகள் காரணமாக நான் கல்வியை முடிக்க முடியவில்லை. அதனால்தான் எனது இறுதி கல்வித் தகுதியாக 5-ம் வகுப்பு வரை படித்ததை மட்டும் குறிப்பிட்டேன்” என்றார்.

ஆம் ஆத்மி கட்சி லோனிகரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in