Published : 27 Jun 2015 08:49 AM
Last Updated : 27 Jun 2015 08:49 AM

நாடு முழுவதும் முன்கூட்டியே தீவிரமடைந்தது தென்மேற்குப் பருவமழை: 28 சதவீதம் கூடுதல் மழை; குஜராத்தில் 81 பேர் பலி, 9,000 பேர் இடம்பெயர்வு

தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட 20 நாட்களுக்கு முன்பாகவே நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் தீவிரமடைந்துள்ளது.

நடப்பாண்டு தென்மேற்குப் பருவமழை 5 நாட்கள் தாமதமாகத் தொடங்கியது. ஆனால், அரபிக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு நிலையால் குஜராத், மகாராஷ்டிரத் தில் கனமழை பெய்தது. மேலும், ஜம்மு-காஷ்மீர், உத்தராகண்ட் மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இம்மாநிலங்களில் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

81 பேர் பலி

குஜராத் மாநிலத்தில் மட்டும் இது வரை மழை காரணமாக 81 பேர் உயிரிழந்துள்ளனர். அம்ரேலி, ராஜ் கோட், பாவ்நகர் மாவட்டங்களில் மழையால் ஏற்பட்ட சேதம் மிக மோசமாக உள்ளது. இதனால், 9,000 பேர் மேட்டுப்பாங்கான பகுதிக்கு இடம்பெயரச் செய்யப் பட்டுள்ளனர். மேலும் வெள்ளத் தில் சிக்கியுள்ளவர்களை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்டு வருகின்றனர்.

தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரி ரிதி பட் கூறும்போது, “வெள்ளத்தால் அடித்துச் செல்லப் பட்டும், சேறுகளில் சிக்கியும், இடிந்த வீடுகளின் இடிபாடுகளில் சிக்கியும் பலர் உயிரிழந்துள்ளனர்” என்றார்.

உத்தராகண்ட்

உத்தராகண்ட் மாநிலத்தில், கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோயில்களுக்குச் சென்ற ஆயிரத் துக்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் பாலம் உடைந்ததால் அங்கேயே சிக்கியுள்ளனர். பக்தர்களை மீட்க, மாநில பேரிடர் மீட்புப் படையினரும் காவல்துறையினரும் சாலைகளை சீரமைத்து வருகின்றனர். கேதார்நாத் கோயில் அருகே சிக்கி உள்ளவர்களை விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கும் முயற்சிகள் தொடங்கியுள்ளன. பத்ரிநாத்தில் 1,500 பேர் சிக்கிக்கொண்டுள்ளனர்.

சோன் பிரயாக் பகுதியில் மந்தாகினி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது. இது கேதார்நாத் செல்லும் வழியில் அமைந்துள்ளது.

அதிக மழைப்பொழிவு காரணமாக மும்பையில் ரயில் போக்குவரத்தும், பொதுப்போக்கு வரத்தும் ஏறக்குறைய துண்டிக் கப்பட்டுள்ளன.

குஜராத், அசாம், ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில் ஆறுகளில் வெள்ளம் கரைபுரள்கிறது. கரை யோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை வழக் கத்தை விட 20 நாட்கள் முன்கூட்டியே நாடு முழுமைக்குமாக பெய்யத் தொடங்கியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“வழக்கமாக ஜூலை 15-ம் தேதிதான் நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் பருவமழை சென் றடையும். ஆனால், இன்றே (ஜூன் 26) இறுதியாக மேற்கு ராஜஸ்தானிலும் தொடங்கிவிட்டது. ஆக, நாடு முழு மையுமாக தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டது. 5 நாட்கள் தாமதமாக மழை தொடங்கினாலும், 21 நாட்களுக்குள்ளாக நாடு முழு மையையும் சென்றடைந்து விட்டது. 2013-ம் ஆண்டும் முன்கூட்டியே நாடு முழுமைக்கும் பருவமழை சென்றடைந்தது. கடந்த 1-ம் தேதி முதல் இதுவரை 28 சதவீதம் கூடுத லாக பெய்துள்ளது. வடகிழக்கு இந்தியாவில் வழக்கத்தை விட 27 சதவீதமும், மத்திய இந்தியாவில் 55 சதவீதமும் கூடுதலாக மழை பொழிந்துள்ளது.

தென்னிந்தியாவில் 30 சதவீத மும், கிழக்கு, வடகிழக்கு மாநிலங் களில் 3 சதவீதமும் கூடுதலாக மழை பொழிந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு இந்தியாவில் 18.2 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. வழக்க மாக 3.2 மி.மீ. அளவே பதிவாகும். ஜம்மு-காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் 34.2 மி.மீ. மழை பதிவாகி யுள்ளது. இது 1,324 சதவீதம் கூடுதலாகும்” என வானிலை ஆய்வு மைய இயக்குநர் லக் ஷ்மண் சிங் ரதோட் தெரிவித்துள்ளார்.

வழிதவறும் சிங்கங்கள்

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலுக்குள் புகுந்து இரு பெண் பக்தர்களை பெண் சிங்கம் ஒன்று தாக்கி காயப்படுத்தியது. மழையிலிருந்து தப்பிக்க அந்தக் கோயிலுக்குள் அது புகுந்திருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

காயமடைந்த பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 15 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு சிங்கத்தைப் பிடித்த வனத்துறையினர் அதனைக் காட்டுக்குள் விடுவித்தனர்.

மற்றொரு சம்பவத்தில், பாவாடி கிராமத்தில் விவசாய நிலத்தில் சேற்றில் சிக்கிய நிலையில் இறந்து கிடந்த சிங்கத்தின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

ஷேத்ருஞ்சி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர வனத்தில் வசிக்கும் சிங்கங்கள் வழிதவறியோ, வெள்ளத்தில் அடித்தோ வரப்பட்டிருக்கும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x