

மோடியுடன் இணைந்து வாழா விட்டாலும், அவரது மனைவி யசோதா பென் பிரதமரின் மனைவி என்ற அடிப்படையில் உச்சபட்ச பாதுகாப்பான சிறப்பு பாதுகாப்புப் படையின் (எஸ்பிஜி பாதுகாப்பைப் பெறுவார்.
எஸ்பிஜி-யின் விதிமுறைகளின் படி இப்பாதுகாப்பு வழங்கப்படும் என முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.மத்தியப்பிரதேச மாநில முன்னாள் காவல்துறைத் தலைவர் சுபாஷ் சந்திர திரிபாதி கூறியதாவது:
எஸ்பிஜியின் விதிமுறைகளின் படி பிரதமரின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். யசோதா பென்னுக்கும் இது பொருந்தும்” என்றார். அதே சமயம், தனக்கு பாதுகாப்பு வேண்டாம் என சம்மந்தப்பட்டவர் மறுக்கலாம். ஆனால், அவருக்கு எவ்வித அச்சுறுத்தல்களும் இல்லா மல் இருந்தால் மட்டுமே அது ஏற்கப்படும், என்றார்.