Last Updated : 09 Jun, 2015 08:35 AM

 

Published : 09 Jun 2015 08:35 AM
Last Updated : 09 Jun 2015 08:35 AM

நாட்டிலேயே முதல் முறையாக கர்நாடகத்தில் பாதுகாக்கப்பட்ட நவீன மின் கம்பிகள் பொருத்த திட்டம்: மின் விரயம், மின் திருட்டு தடுக்கப்படும்

கர்நாடக மின்சாரத் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறிய தாவது: சூரிய சக்தி, காற்றாலை, நீர் மற்றும் அனல் மின் நிலையங்கள் மூலம் மின் உற்பத்தியில் கர்நாடகா மிக வேகமாக முன்னேறி வருகிறது. குறிப்பாக சூரிய மின் உற்பத்தியில் புதிய திட்டங்களை வகுத்து நாட்டிலேயே மிகப்பெரிய உற்பத்தி மையமாக மாறியுள்ளது. இதன் மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் மாநிலத்தின் மின்சாரத் தேவை அனைத்தும் பூர்த்தி செய்யப்படும்.

இப்போது மின் உற்பத்தி மையங்களிலிருந்து மற்ற இடங் களுக்கு அலுமினிய கம்பிகள் மூலம் மின்சார விநியோகம் நடைபெறுகிறது. இந்தக் கம்பி களில் அதிக மின் அழுத்தம் கொண்ட மின்சாரத்தைக் கொண்டு செல்வது பெரும் சவலான செயலாக உள்ளது. இதனால் மின்சார‌ விரயம், ஏராளமான மின் திருட்டு, பறவைகள் இறப்பும் அதிகமாகிறது. மழைக் காலங்களில் மின் வயர்கள் திடீரென அறுந்து விழுவதால் மனித உயிர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

இதைத் தடுக்க வழக்கமாக பயன்படுத்தப்படும் மின் கம்பி களுக்கு பதிலாக பாதுகாக் கப்பட்ட மின் கம்பிகளைப் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சுவீடன் நாட்டில் தயாரிக் கப்பட்ட இந்த கம்பிகள் நாட்டிலேயே முதல் முறையாக கர்நாடகத்தில், குறிப்பாக பெங்களூருவில் பொருத் தப்பட உள்ளது. இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் மின்சார விரயம், மின் திருட்டை முழுமையாக தடுக்க முடியும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x