18 லட்சம் காசோலை மோசடி வழக்குகளுக்கு தீர்வு: மாற்றுமுறை ஆவண சட்டத்தை திருத்த அவசர சட்டம் - மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

18 லட்சம் காசோலை மோசடி வழக்குகளுக்கு தீர்வு: மாற்றுமுறை ஆவண சட்டத்தை திருத்த அவசர சட்டம் - மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
Updated on
1 min read

காசோலை மோசடி வழக்கு தொடுத் துள்ள 18 லட்சம் பேர் பயனடையும் வகையில், மாற்றுமுறை ஆவண (நெகோஷியபிள் இன்ஸ்ட்ரு மென்ட்) சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்காக அவசரச் சட்டம் பிறப்பிக்க மத்திய அமைச்சரவை நேற்று முடிவு செய்தது.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் அரசு அமைந்த பிறகு கொண்டுவரப்பட உள்ள 14-வது அவசரச் சட்டமாக இது இருக்கும்.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடை பெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு மத்திய சாலைப் போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது:

காசோலை பணமின்றி திரும்பி யது தொடர்பாக நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 18 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், ஒருவருக்கு வழங் கப்பட்ட காசோலை பணமின்றி திரும்பும்போது, மாற்று முறை ஆவண சட்டப்படி, அந்தக் காசோலை வழங்கப்பட்ட வங்கிக் கிளை அமைந்துள்ள இடத்தில் மட்டுமே வழக்கு தொடுக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பில் கூறியுள்ளது.

இந்தத் தீர்ப்பு தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், காசோலை வழங்கியவர்களை பாது காக்கும் வகையில் உள்ளதாகவும் காசோலை பெற்றவர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது.

எனவே, இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்கான மசோதா மக்களவையில் கடந்த மே மாதம் நிறைவேறியது. ஆனால், மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியாமல் போனது. எனவே, இது தொடர்பாக அவசரச் சட்டம் பிறப் பிப்பது என மத்திய அமைச்சர வைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் 18 லட்சம் பேர் பயனடைவார்கள்.

காசோலை பணமின்றி திரும்பி னால், காசோலையை பணமாக்கு வதற்காக செலுத்தப்பட்ட வங்கிக் கிளை அமைந்துள்ள இடத்திலேயே வழக்கு தொடுக்க இந்த அவசரச் சட்டம் வகை செய்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பருப்பு வகைகள் இறக்குமதி

மத்திய உணவு மற்றும் நுகர் வோர் நலத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கூறும்போது, “பருப்பு வகைகளின் விலை உயர்வு குறித்து மத்திய அரசு கவலை அடைந்துள்ளது. தேவையை சமாளிக்கும் வகையில் பருப்பு வகை கள் அதிக அளவில் இறக்குமதி செய் யப்படும். மேலும் பதுக்கல்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளோம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in