தி இந்து செய்தி எதிரொலி: காஷ்மீரில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டைக்கு டாக்சிகளை பயன்படுத்துவதை நிறுத்தியது ராணுவம்

தி இந்து செய்தி எதிரொலி: காஷ்மீரில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டைக்கு டாக்சிகளை பயன்படுத்துவதை நிறுத்தியது ராணுவம்
Updated on
1 min read

'தி இந்து' ஆங்கிலத்தில் வெளியான செய்தியால், ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டைக்கு வாடகை டாக்சிகளை பயன்படுத்துவதை இந்திய ராணுவம் நிறுத்தியுள்ளது.

இந்த நடவடிக்கையால், 13 ஆண்டுகளுக்குப் பிறகு தாங்கள் பெரும் நிம்மதியடைந்திருப்பதாக பாரமுல்லா மாவட்ட டாக்சி டிரைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய ராணுவத்தின் 29-வது ராஷ்டிரீய ரைபில்ஸ் படைப்பிரிவினர், ஜம்மு-காஷ்மீரில் மேற்கொள்ளப்படும் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டைக்கு வாடகை டாக்சிகளை அதுவும் கட்டணமே அளிக்காமல் பயன்படுத்தி வந்தனர்.

இதனால், தங்கள் கார்களை எங்கு எடுத்துச் செல்கின்றனர் என்பது தெரியாமலும், தங்களுக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் ஏற்படுமோ என்ற பயத்திலும் டாக்சி ஓட்டுநர்கள் பயத்தில் இருந்துள்ளனர்.

இந்நிலையில், இது குறித்து 'தி இந்து' நாளிதழில் செய்தி வெளியானது. செய்தி வெளியிடப்பட்ட அடுத்த நாளே டாக்சி ஓட்டுநர்களை அழைத்துப் பேசிய ராணுவ தரப்பு இனிமேல் இரவு நேரங்களில் ராணுவப் பணிக்காக டாக்சிகளை அனுப்பத் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளது.

இது குறித்து டாக்சி ஓட்டுநர் ஒருவர் கூறும்போது, "டாக்சிகளை ராணுவப் பணிக்காக பயன்படுத்தும் விதியை மாற்றிக் கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 2002-ம் ஆண்டுக்குப் பிறகு இரவு நேரங்களில் எங்கள் வாகனங்களை ராணுவப் பணிக்காக அனுப்பாமல் இருப்பது இதுவே முதல் முறை" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in