

பிரதமர் மோடிக்கு இரண்டு முகங் கள் உள்ளன, அவரது ஆட்சியில் மக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடை பெற்றது. இதில் கட்சித் தலைவர் சோனியா காந்தி பேசியதாவது:
பிரதமர் மோடி தன்னை நல்லாட்சி யின் நாயகன் என்று விளம்பரப் படுத்தி வருகிறார். அதேநேரம் அவரது சகாக்கள் மதவாதத்தை தூண்டும் வகையில் பேசி வரு கின்றனர். அவர்கள் அவ்வாறு பேச மோடி அனுமதிக்கிறார். இத்தகைய மததுவேஷ கருத்துகளால் நாட்டின் மதச்சார்பின்மை பாதிக்கப்பட் டுள்ளது. மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர்.
பிரதமர் மோடியைப் பொறுத்த வரை சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாக உள்ளது. இரட்டை முகங் களுடன் அவர் நாடகமாடுகிறார்.
மோடியின் ஆட்சியில் ஒரே இடத் தில் அதிகாரம் குவிக்கப்பட்டு வரு கிறது. அவர் ஆட்சி நடத்தும் விதம் சர்வாதிகார போக்கை வெளிப் படுத்துகிறது. நிலம் கையகப்படுத் தும் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் விவசாயிகளுக்கு விரோதமாக உள்ளன. உணவுப் பாதுகாப்புச் சட்டம் நீர்த்துப் போகச் செய்யப்படுகிறது.
மாநில அரசுகளின் மீது நிதிச்சுமையை மத்திய அரசு அதிகரித்து கொண்டே செல்கிறது. அதேநேரம் பெருநிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளை வாரி வழங்கு கிறது. திட்ட கமிஷனை கலைத்த தால் 11 மாநிலங்களுக்கு அளிக் கப்பட்ட சிறப்பு அந்தஸ்து பறி போயுள்ளது. இதில் 8 மாநிலங் களில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறு கிறது. அதனால் அந்த மாநிலங்கள் குறித்து மத்திய அரசுக்கு கவலையில்லை.
பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கருப்பு பணம் குறித்து பேசிய போது, வெளிநாடுகளில் பதுக்கப் பட்டுள்ள கருப்பு பணத்தை மீட் போம். அதன்மூலம் ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்றார்.
மக்களவைத் தேர்தலின்போது இதுபோல் பல்வேறு பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி பாஜக ஆட்சியைப் பிடித்தது. அதை மக்கள் இப்போது உணர்ந்து கொண்டுள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது: கடந்த காங்கிரஸ் ஆட்சி அறிமுகப்படுத்திய திட்டங் களை பாஜக அரசு மறுபெயர்களில் இப்போது செயல்படுத்தி வரு கிறது. கடந்த ஓராண்டில் பல்வேறு தொழில்கள் நலிவடைந்துள்ளன. ஆனால் 7.5 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது என்று மத்திய அரசு கூறுகிறது. பாஜக அரசு கொண்டு வந்துள்ள சேவை, சரக்கு வரியால் மத்திய, மாநில அரசு களுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்காது. திட்ட கமிஷனை கலைத்ததால் பின்தங்கிய மாநிலங் கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ராகுல் காந்தி யோசனை
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: காங்கிரஸ் ஆளும் 9 மாநிலங்களும் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும். வளர்ச்சித் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் பேசியபோது, வேளாண் துறை நலிவடைந்துள்ளது, விவ சாயிகள் வாழ்வா, சாவா போராட் டத்தை நடத்தி வருகின்றனர் என்று தெரிவித்தார்.