

ஊழல் புகாரில் சிக்கி சர்ச் சைக்குள்ளாகியுள்ள சாரதா குழும நிறுவனங்களிடமிருந்து பெற்ற ரூ.1.2 கோடியை அம லாக்கத் துறையினரிடம் நேற்று ஒப்படைத்தார் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங் களவை எம்.பி.யும் நடிகருமான மிதுன் சக்ரவர்த்தி.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரம் கூறியதாவது:
சாரதா குழும நிறுவனங்களின் விளம்பர தூதராக மிதுன் செயல் பட்டார். இந்நிலையில், சாரதா குழுமம் நிதி மோசடி புகாரில் சிக்கயதையடுத்து, மிதுனிடமும் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, விளம்பரத் தூதராக செயல்படுவதற்காக சாரதா குழுமத்திடமிருந்து பெற்ற தொகையை திருப்பித் தருவதாக மிதுன் ஒப்புக் கொண்டார்.
இதன்படி, மிதுனின் வழக்கறி ஞர்களும் பிரதிநிதிகளும் கொல் கத்தாவில் அமலாக்கத் துறை அலுவலகம் அமைந்துள்ள சால்ட் லேக் பகுதிக்கு நேற்று சென்றனர். அங்கு சாரதா குழுமம் மீதான நிதி மோசடி புகார் குறித்து விசாரிக்கும் விசாரணை அதிகாரியிடம் ரூ.1.2 கோடிக்கான காசோலையை ஒப்படைத்தனர்.
நடிகரின் இந்த செயல் மற்றும் விசாரணையின்போது சாரதா குழுமத்தில் தனது பங்கு குறித்து அவர் அளித்த வாக்குமூலம் ஆகியவற்றில் அமலாக்க துறையினர் திருப்தி அடைந்தி ருப்பதாக தெரிய வந்துள்ளது. இவ்வாறு அந்த வட்டாரம் தெரிவித் துள்ளது.
கடந்த மே மாதம் அமலாக்கத் துறை நடத்திய விசாரணையின் போது, சாரதா குழுமத்தின் விளம் பரத் தூதுவராக செயல்பட்ட தன்னிடம் தரப்பட்ட விளம்பர உரைகள், சிடிகள், டிவிடி போன்ற வற்றை சக்ரவர்த்தி விசாரணை அதிகாரியிடம் ஒப்படைத்தார். மேலும் ஒப்பந்தத்தின்படி தான் செயல்பட்டதாகவும் நிதி மோசடி யில் தனக்கு தொடர்பு இல்லை என்றும் மிதுன் விசாரணை அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.
சாரதா குழுமம் மீது நிதி மோசடி சட்டத்தின் கீழ் 2013-ல் கிரிமினல் வழக்கு தொடுத்தது அமலாக்கப் பிரிவு. இதில் எம்பிக்கள், அரசியல் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக 338 வங்கிக் கணக்குகள், 224 நிறுவனங்களை பயன்படுத்தி மேற்குவங்கம், ஒடிஸா, அசாம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பொதுமக்களின் பணம் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி சிபிஐ விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.