Published : 12 Jun 2015 10:04 AM
Last Updated : 12 Jun 2015 10:04 AM

வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் உஷார் நிலை

தீவிரவாத முகாம்கள் மீது ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் இந்தியாவுக்குள் என்எஸ்சிஎன்- கே பிரிவு தீவிரவாதிகள் நுழைந்துள்ளதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது.

இதையடுத்து வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் பாது காப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் உயர்நிலைக் குழுக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பாது காப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ராணுவ துணைத் தலைவர் லெப்டினன்ட் பிலிப் கேம்பஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் உளவுத்தகவல்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டன.

மணிப்பூரில் 18 ராணுவ வீரர் களை தீவிரவாதிகள் கொன்றதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் மியான்மருக்குள் நுழைந்து தீவிர வாத முகாம்களை தாக்கியது. இதில் சுமார் 38 பேர் கொல்லப் பட்டனர்.

இதற்கு பழிவாங்கும் வகையில் என்எஸ்சிஎன்-கே, பிஎல்ஏ, உல்பா மற்றும் புதிதாக தோன்றியுள்ள மேற்கு தெற்கு கிழக்கு ஆசிய ஐக்கிய தேசிய விடுதலை முன் னணி ஆகிய தீவிரவாத குழுக் களைச் சேர்ந்த 20 தீவிரவாதி கள் இந்திய-மியான்மர் எல்லையையொட்டி ஊடுருவி யுள்ளதாக உளவுத் தகவல்கள் வெளியாகி உள்ளன இதையடுத்து வடகிழக்கு பிராந்தியம் முழுவ திலும் உள்ள பாதுகாப்பு நிலைமை மற்றும் ராணுவ நடவடிக்கையால் ஏற்படக்கூடிய பின்விளைவு ஆகியவை பற்றி உயர்நிலைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

கடந்த செவ்வாய்க்கிழமை ராணுவம் எடுத்த நடவடிக்கை வெற்றிகரமாக அமைந்திருப்ப தால் எதிர்காலத்தில் தேவைப்பட் டால் அதுபோல நடவடிக்கை மேற் கொள்ள தயாராக இருபபதாக அதி கார வட்டாரங்கள் தெரிவித்தன.

இருப்பினும் மியான்மரில் விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதால் அதன் உணர்வுகளை கருத்தில்கொண்டு கவனமாக கையாளவும் அரசு முடிவு செய்துள்ளது.

மியான்மருக்கு விரைவில் பயணம் மேற்கொண்டு அந் நாட்டில் முகாமிட்டு செயல்பட்டு வந்த தீவிரவாதிகளை வேட்டை யாடும் துணிச்சல்மிகு நட வடிக்கை எடுத்ததற்கான கட்டாய சூழ்நிலையை மியான்மர் தலைவர்களிடம் தோவல் எடுத் துரைப்பார் என்றும் அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.

மியான்மருக்குள் புகுந்து தீவிரவாதிகளை வேட்டையாடி முடித்தபிறகே தமது ராணுவ நடவடிக்கை பற்றி அந்நாட்டுக்கு தெரிவித்தது அதன் தலைவர் களை அதிருப்தி அடையச் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் மத்திய அரசு இதை மறுத்துள்ளது. ராணுவ நடவடிக்கை பற்றி மியான்மருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து விட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x