

நரேந்திர மோடி தலைமையிலான அரசிடமிருந்து நிறைய எதிர்ப்பார்ப்புகள் உள்ளதாக பிஹார் முன்னாள் முதல்வர் நிதிஷ் குமார் கூறினார்.
நாட்டின் 16வது மக்களவை அமைய உள்ள நிலையில், பிரதமராக நரேந்திர மோடி இன்று மாலை பதவியேற்கிறார்.
இது குறித்து பிஹார் முன்னாள் முதல்வர் நிதிஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், " நான் முன்னதாகவே நரேந்திர மோடிக்கு வாழ்த்து கூறிவிட்டேன். தற்போது புதிதாக அமைய இருக்கும் அமைச்சரவைக்கு எனது வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
உடன் இருந்த பிஹார் முதல்வர் ஜித்தன் ராம் மாஞ்சி கூறுகையில், "நரேந்திர மோடியிடமிருந்து பிஹார் நலனுக்காக மிகவும் எதிர்ப்பார்க்கிறேன். பிஹாருக்கு தனி மாநில அந்தஸ்த்து வழங்க வேண்டும். இங்கு மத்திய அரசின் பல திட்டங்கள் நிறைவேறாமல் இருக்கின்றன. மாநிலம் விட்டு மாநிலம் வந்தவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான சட்டம் வகுக்கப்பட வேண்டும், அவர்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட வேண்டும்” என்றார்.
இன்று மாலை நடைபெற இருக்கும் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில், பிஹார் முதல்வர் ஜித்தன் ராம் மாஞ்சி பங்கேற்கிறார். இந்த நிலையில் நிதிஷ் இந்த விழாவில் பங்கேற்காமல் தவிர்த்துள்ளார்.