காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் புதிய அணைகள் கட்டும் பணி செப்டம்பரில் தொடங்கும் என கர்நாடகா அறிவிப்பு

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் புதிய அணைகள் கட்டும் பணி செப்டம்பரில் தொடங்கும் என கர்நாடகா அறிவிப்பு
Updated on
1 min read

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் புதிய அணைகள் கட்டுவதற்கு இன்னும் சில தினங்களில் உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகள் கோரி, செப்டம்பரில் பணிகளை தொடங்கப் போவதாக கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டத்தில் உள்ள மேகேதாட்டு வில் புதிய அணைகள் கட்டி பெங்களூரு, மைசூரு, கோலார் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்குவதற்கும், மின்சாரம் உற்பத்தி செய்வதற்கும் அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு த‌மிழக அரசும், அரசியல் கட்சிகளும், விவசாய சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் அமைச்சர் எம்.பி. பாட்டீல் பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மேகேதாட்டுவில் கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் நீர்மின் நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு திட்ட வரைவு அறிக்கை தயாரிப்பதற்காக பட்ஜெட்டில் ரூ. 25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பல்வேறு வல்லுநர் குழுக்கள் திரட்டிய ஆதாரங்களைக் கொண்டு திட்ட வரைவு அறிக்கை இறுதி செய்யும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

எனவே, மேகேதாட்டுவில் புதிய அணைகள் கட்டுவதற்கு உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகள் இன்னும் சில தினங்களில் கோரப்படும். ஒப்பந்தப் புள்ளிகளை ஆராய்ந்து இறுதி செய்வதற்கு, இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்கள் வரை ஆகலாம்.

எனவே செப்டம்பரில் கூட்டு குடிநீர் திட்டத்துக்கான திட்ட வரைவு அறிக்கை இறுதி செய்யப்பட்டதும், புதிய அணைகள் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படும். அத‌ற்கு முன்னதாக அணை கட்டு வதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பிக் கப்படும்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசின் எதிர்ப்பு, கர்நாடகாவுக்கு பெரிய சிக்கலாக இருக்காது'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in