

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி குறுகிய கால பயணமாக நேற்று வெளிநாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
இதுகுறித்து அக்கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா கூறும்போது, “சோனியா காந்தி சொந்தப் பணி காரணமாக வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார்” என்றார்.
எதற்காக வெளிநாடு சென்றுள்ளார் என்ற விவரம் தெரியவில்லை. எனினும், ஒரு வாரத்தில் நாடு திரும்புவார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இதுபோல், ராகுல் காந்தியும் வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், உறுதியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.