

ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி மீது ஊழல் வழக்கு உள்ளது. அவர் லண்டனில் வசிக்கிறார். அங்கிருந்து போர்ச்சுக்கல் செல்ல விசா பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதால், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா, ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ஆகியோர் உதவியுள்ளனர். இது பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், லலித் மோடிக்கும் வசுந்தரா ராஜேவின் குடும்பத்தின ருக்கும் வர்த்தக ரீதியாக நிறைய தொடர்புகள் இருப்பதாக பல செய்திகள் வெளிவந்தன.
இதற்கு பதில் அளிக்கும் வகை யில், ராஜஸ்தான் முதல்வர் அலு வலகம் நேற்றுமுன்தினம் ஓர் அறிக்கை வெளியிட்டது. அதில், “முதல்வர் வசுந்தராவின் நற்பெய ருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஊடகங்கள் செய்திகள் வெளியிடுகின்றன. வதந்திகளின் அடிப்படையில் செய்திகள் வெளியிட வேண்டாம். செய்திகளை வெளியிடுவதற்கு முன்பு நன்கு உறுதி செய்ய வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், வசுந்தரா ராஜே தனக்கு ஆதரவாக 120 எம்எல்ஏக் களிடம் கையெழுத்து வேட்டை நடத்துவதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதை முதல்வர் அலுவலகம் திட்டவட்டமாக மீண்டும் மறுத்துள்ளது. தொடர்ந்து 2-வது நாளாக முதல்வர் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
வெள்ளிக்கிழமைதோறும் தனது இல்லத்தில் பொதுமக்களை சந்தித்து முதல்வர் வசுந்தரா குறை களை கேட்டறிந்து வருகிறார். அந்த நிகழ்ச்சிக்கு எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதி மக்களை அழைத்து வந்து முதல்வரிடம் அவர்கள் குறைகளை, கோரிக்கைகளை சொல்ல வைக் கின்றனர். அதுபோல்தான் இன்று (நேற்று) முதல்வர் இல்லத்தில் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. முதல்வரை சந்திக்க எம்எல்ஏக்களும் கட்சித் தொண்டர் களும் வந்தனர்.
ஆனால், லலித் மோடி விவகாரத்தில் தனக்கு ஆதரவாக 120 எம்எல்ஏக்களிடம் முதல்வர் வசுந்தரா கையெழுத்து வாங்கி வருகிறார் என்று ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் தவறானது. பொதுமக்களின் குறை களை கேட்கும் நிகழ்ச்சியை வேறு விதமாக திரித்து செய்தி வெளியிடு வது நல்லதல்ல. இவ்வாறு முதல்வர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நேற்று காலை 10 மணிக்கு மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந் தார் வசுந்தரா. இந்நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப் படவில்லை.