

பஞ்சாப் மாநிலம் லுதியானாவில் காஸ் டேங்கர் லாரி ஒன்றில் இருந்து அமோனியா வாயு கசிந்ததில் 6 பேர் பலியாகினர். 100 பேருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
லுதியானாவில் இருந்து 25 கி.மீ. தூரத்தில் உள்ளது தொராஹா பைபாஸ் சாலை, இங்கு ஒரு மேம்பாலத்தின் கீழ் அமோனியா வாயு ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி ஒன்று பழுதடைந்து நின்றது.
லாரியில் இருந்து எதிர்பாராதவிதமாக விஷவாயு கசிந்தது. இதில், சுற்றுவட்டார பகுதியில் இருந்த வீடுகளில் வசித்தவர்களில் 6 பேர் பலியாகினர். 100 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்தில் பலியானவர்களின் அடையாளம் காணப்படவில்லை. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.