ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்ய அரசாணை வெளியீடு: ஜூலை முதல் வாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் - அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தகவல்

ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்ய அரசாணை வெளியீடு: ஜூலை முதல் வாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் - அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தகவல்
Updated on
1 min read

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்வது தொடர்பாக கர்நாடக அரசு நேற்று அரசாணை வெளியிட்டது.

உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு விசாரணையில் அரசு வழக்கறி ஞராக பி.வி. ஆச்சார்யாவும், அவருக்கு உதவி வழக்கறி ஞராக சந்தேஷ் சவுட்டாவும் செயல்படு வார்கள். இந்த மேல்முறையீட்டு மனுவை தயாரிப்பது, தாக்கல் செய்வது உள்ளிட்ட பணிகளை உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஜோசப் ஹரிஸ்டாட்டில் கவனித்துக் கொள்வார் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு வழக்க றிஞர் பி.வி. ஆச்சார்யா கூறி யதாவது

கர்நாடக உயர் நீதிமன்றத் தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு அரசாணை மிகவும் அவசியம். கடந்த காலத் தில் கர்நாடக அரசு வழக் கறிஞர் நியமனத்தில் முறையாக அரசாணை வெளியிடாததை வைத்து, எதிர் தரப்பு (ஜெய லலிதா) தேவையற்ற கால தாம தம் செய்தது. எனவே அதுபோன்ற பிரச்சினைகளுக்கு இடம் கொடா மல் அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஜூலை முதல் வாரத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய் யப்படும்.

மேல்முறையீடு செய்வது என்பது அரசியல் ரீதியாக எடுக்கப்பட்ட பழிவாங்கல் முடிவு அல்ல. இது முழுக்க முழுக்க சட்ட ரீதியாக எடுக்கப்பட்ட முடிவு. இந்த வழக்கு ஒரு மாநில முதல்வருக்கு எதிரானது என்பதால் கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் ஒட்டுமொத்த அமைச்சரவை கூடி முடிவெடுத்தது.

ஜெயலலிதா தரப்பு ஒப்புக் கொண்ட சொத்துகளின்படி பார்த் தால், அவர்களது வருமானத்துக்கு அதிகமான சொத்து மதிப்பு 200 சதவீதத்தை விட அதிகமாக இருக்கும். இப்படி இருக்கும் போது ஜெயலலிதாவை நிரபராதி என எப்படி அறிவிக்க முடியும் என்பது போன்ற வாதங்களை முன்வைத்து உச்சநீதிமன்றத்தில் வாதிடப் படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in