

மும்பை துறைமுகப் பகுதி கடலில் மூழ்கி கொண்டிருக்கும் ஜிண்டால் காமாட்சி என்ற கப்பலிலிருந்து 20 பேரை கடற்படை அதிகாரிகள் மீட்டனர்.
மும்பை துறைமுகத்தில் இருந்து 40 நாட்டிகல் மைல் தொலைவில் ஜிண்டால் காமாட்சி கப்பல் மூழ்கி வருவதாக நேற்று நள்ளிரவு கடற்படைக்கு தகவல் வந்தது.
இதனை அடுத்து கடற்படை ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்புப் பணிகள் முழு வீச்சில் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலில் இருந்த 20 பேரை மீட்டுள்ளதாக கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்டவர்களை அழைத்து வருவதற்காக ஐ.என்.எஸ். ஷிக்ரா எனும் கப்பல் அனுப்பப்பட்டுள்ளது.
ஜிண்டால் - காமாட்சி கப்பலின் பெரும்பாலான பகுதி மூழ்கிவிட்ட நிலையில் அதன் சேதம் மற்றும் மூழ்கியதற்கான காரணங்கள் தொடர்பான தகவல் எதுவும் தெரிய வரவில்லை.