

மேகி நூடுல்ஸ்க்கு இந்திய உணவுக் கட்டுப்பாடு மற்றும் தர நிர்ணய ஆணையம் தடை விதித்து பிறப்பித்துள்ள உத்தரவை மறு ஆய்வு செய்யுமாறு மும்பை நீதிமன்றத்தில் நெஸ்லே நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ளது.
மேகி நூடுல்ஸில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயன உப்பு, காரீயம் ஆகியவை குறிப்பிட்ட அளவைவிட அதிகமாக கலக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மும்பை நீதிமன்றத்தை நாடியுள்ள நெஸ்லே, மேகி நூடுல்ஸ்க்கு தடை விதித்து கடந்த ஜூன் 6-ம் தேதியன்று இந்திய உணவுக் கட்டுப்பாடு மற்றும் தர நிர்ணய ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவை மறு ஆய்வு செய்யுமாறு கோரியுள்ளது.
இந்த மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது மும்பை நீதிமன்றம்.
இருப்பினும் தொடர்ந்து மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை கடைகளில் இருந்து திரும்பப்பெறுவதை தங்கள் நிறுவனம் நிறுத்தவில்லை எனவும் தெரிவித்துள்ளது