சூதாட்டத்தில் ஈடுபட்ட சூப்பர் கிங்ஸ் வீரர்களை காப்பாற்றினார்: என்.சீனிவாசன் மீது லலித் மோடி குற்றச்சாட்டு

சூதாட்டத்தில் ஈடுபட்ட சூப்பர் கிங்ஸ் வீரர்களை காப்பாற்றினார்: என்.சீனிவாசன் மீது லலித் மோடி குற்றச்சாட்டு
Updated on
1 min read

ஐபிஎல் போட்டியின்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் 3 பேரை அப்போது பிசிசிஐ தலைவ ராக இருந்த என்.சீனிவாசன் காப்பாற்றினார் என்று லலித் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

சூப்பர் கிங்ஸ் அணியின் மூன்று வீரர்கள் (ரெய்னா, ஜடேஜா, பிராவோ) ஆகியோர் தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து பணம் பெற்றதாக லலித் மோடி 2013-ம் ஆண்டு அனுப்பிய இ-மெயில் தங்களிடம் உள்ளதாக ஐசிசி இப்போது அறிவித்துள்ளது.

இந்நிலையில், லண்டனில் இருந்து கொண்டு இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி, லண்டன் தொலைக் காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: சூதாட்டத்தில் ஈடுபட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் மூன்று பேரை அப்போதைய பிசிசிஐ தலைவர் சீனிவாசன் காப்பாற்றினார். இப்போது அவர் ஐசிசி அமைப்புக்கே தலைவ ராகி விட்டார். அவர் நம்பகமான வர் அல்ல. எனது குற்றச்சாட்டு குறித்து ஐசிசி தலைவர் என்ன பதில் சொல்லப்போகிறார் என் பதை இந்தியாவே ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது.

இந்தியாவையும், கிரிக்கெட் டையும், விளையாட்டையும் கடவுள்தான் காப்பாற்ற வேண் டும். எனக்கு எவ்வித அச்சுறுத்த லும் இல்லை என்று தோன்றும் போது மீண்டும் இந்தியா திரும்பு வேன். இந்திய அரசு அளிக்கும் உத்தரவாதத்தை நம்பி அங்கு செல்ல மாட்டேன் என்று லலித் மோடி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in