Last Updated : 30 Jun, 2015 08:50 AM

 

Published : 30 Jun 2015 08:50 AM
Last Updated : 30 Jun 2015 08:50 AM

மேகியைத் தொடர்ந்து டாப் ராமன் நூடுல்ஸும் வாபஸ்

மேகியைத் தொடர்ந்து டாப் ராமன் நூடுல்ஸை இந்திய சந்தையிலி ருந்து திரும்பப் பெறுவதாக அதன் தயாரிப்பாளரான இந்தோ நிசின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அனுமதிக்கப்பட்ட அளவைவிட மோனோசோடியம் குளூடமேட் (எம்எஸ்ஜி) அளவு கூடுதலாக இருப் பது கண்டறியப்பட்டதால், நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸுக்கு பல மாநிலங்கள் தடை விதித்தன.

இதையடுத்து, அனைத்து பிராண்ட் நூடுல்ஸையும் பரிசோ தனைக்கு உட்படுத்துமாறு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (எப்எஸ்எஸ்ஏஐ) உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, மேலும் சில நிறுவனங்களின் நூடுல்ஸ்களிலும் ரசாயன அளவு நிர்ணயிக்கப்பட்டதைவிட கூடுதலாக இருந்ததால் அவற்றுக்கு தடை விதிக்கப்பட்டன.

இதுகுறித்து டாப் ராமன் தயாரிப்பாளரான இந்தோ நிசின் ஃபுட்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் கவுதம் சர்மா வெளியிட்டுள்ள அறிக் கையில், “டாப் ராமன் நூடுல்ஸை உணவு பாதுகாப்பு அமைப்பின் பரி சோதனைக்கு அனுப்பி உள்ளோம். இதன் முடிவு நிலுவையில் உள்ள நிலையில், அனுமதி கிடைக்கும் வரை திரும்பப் பெறுமாறு அந்த அமைப்பு கேட்டுக் கொண்டது. இதனால் டாப் ராமனை வாபஸ் பெறுகிறோம்” என்றார்.

இந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனத்தின் நார் சூப்பி நூடுல்ஸுக்கான பரிசோதனை முடிவும் நிலுவையில் உள்ளதால், அவையும் திரும்பப் பெறப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x