

தேர்வில் நடந்த முறைகேடுகள் காரணமாக, அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நான்கு வாரங்களுக்குள் மறுதேர்வு நடத்த சிபிஎஸ்இ-க்கு உத்தர விடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்து வக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களைச் சேர்க்க ஆண்டுதோறும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. சிபிஎஸ்இ அமைப்பு கடந்த மே 3-ம் தேதி இத்தேர்வை நடத்தியது. 6 லட்சத்து 30 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் முறைகேடு நடந்துள்ளதாக மறுநாளே குற்றச்சாட்டு எழுந்தது. ஹரி யாணா மாநிலம் ரோத்தக் நகரைச் சேர்ந்த ஒருவரை அம்மாநில போலீஸார் கைது செய்து விசாரித்ததில் முறை கேடு நடந்ததற்கான ஆதாரம் கிடைத்தது. இதன்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்தது.
இந்நிலையில், தன்வி சாவல் என்ற மாணவர் உள்ளிட்ட பலர் உச்ச நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தனர். தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளது உறுதியாகி உள்ளதால், இத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இம்மனு உச்ச நீதிமன்ற நீதி பதிகள் ஆர்.கே.அகர்வால், அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த விவகாரம் குறித்து அறிக்கை அளிக்கும்படி, ஹரியாணா மாநில போலீஸாருக்கு நீதி பதிகள் உத்தரவிட்டனர். அந்த அறிக்க மூலம், நாடு முழு வதும் வெவ்வேறு தேர்வு மையங்களில் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்தது. தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிட்டனர்.
சிபிஎஸ்இ சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார், ‘உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்துள்ள உத்தரவுப்படி, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1-ம் தேதி மருத்துவ படிப்புகள் தொடங்க வேண்டும். செப்டம்பர் 30-ம் தேதிக்குப் பிறகு எந்த மாணவர் சேர்க்கையும் இருக்கக் கூடாது என்று உத்தர விடப்பட்டுள்ளது. போலீ ஸார் அளித்துள்ள அறிக்கை யின்படி, 44 மாணவர்கள் மட்டுமே பலன் அடைந்துள் ளனர். அதற்காக மொத்த தேர்வையும் ரத்து செய்யக் கூடாது. மறுதேர்வு நடத்த 120 நாட்கள் தேவைப்படும். இதனால், அடுத்த கல்வி யாண்டு மாணவர் சேர்க்கை நாடு முழுவதும் பாதிக்கும்’ என்று வாதிட்டார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதி கள், ‘தேர்வில் முறைகேடு நடந்துள்ளது உறுதி செய் யப்பட்டுள்ளது. தற்போது நடந்துள்ள தேர்வு ரத்து செய்யப்படுகிறது. மறு தேர்வை 4 வாரங்களுக்குள் சிபிஎஸ்இ நடத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.