சாதி, மதம் சார்ந்தது அல்ல யோகா: ராஜ்நாத் விளக்கம்

சாதி, மதம் சார்ந்தது அல்ல யோகா: ராஜ்நாத் விளக்கம்
Updated on
1 min read

யோகா என்பது சாதி, மத, இனம் சார்ந்தது அல்ல. சர்வதேச யோகா தினத்தன்று யோகா செய்வதும் கட்டாயமும் அல்ல என மத்திய உள்துறை அமைசர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

வரும் 21-ம் தேதி சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு டெல்லியில் பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார்.

இதையொட்டி பல நிகழ்ச்சிகளுக்கு நாடு முழுவதும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அரசு பள்ளிகளில் யோகா மற்றும் சூரிய நமஸ்காரத்தை பின்பற்ற அறிவுறுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

அவ்வாறாக அரசுப் பள்ளி மாணவர்களிடம் சூரிய வணக்கத்தைக் கட்டாயப்படுத்தி திணிக்கும் முயற்சியில் ஈடுபடக் கூடாது என முஸ்லிம் மத அமைப்புகள் சில எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், இது குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ள உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "யோகா என்பது சாதி, மத, இனம் சார்ந்தது அல்ல. சர்வதேச யோகா தினத்தன்று யோகா செய்வதும் கட்டாயமும் அல்ல" என விளக்கமளித்துள்ளார்.

ஆசனங்கள் மதத்தோடு தொடர்புள்ளவை அல்ல. அவற்றைத் தினமும் பின்பற்றினால் செயல்திறன் அதிகரிக்கும் என யோகா குரு பாபா ராம்தேவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in