Published : 03 Jun 2015 08:53 AM
Last Updated : 03 Jun 2015 08:53 AM

மாட்டு இறைச்சிக்கு தடை விவகாரம்: பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் - அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா கருத்து

பசுக்கள் மீது பெரும்பான்மை சமூகத்தினருக்கு தனிப்பட்ட மரியாதை உள்ளது. அவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்று சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா கூறினார்.

பாஜக ஆளும் மகாராஷ்டிரா, ஹரியாணா ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் மாட்டுக்கறிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இதை ஆதரிக்கும் வகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று டெல்லியில் கூறும்போது, “யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தக் கூடாது என்பதை நான் கொள்கையாகக் கொண்டுள்ளேன். சிறுபான்மையினர் உணர்வுகள் பற்றி பேசும் நாம், ஏன் பெரும்பான்மையினர் உணர்வுகள் பற்றி சிந்திக்கக் கூடாது?

பசுக்கள் மீது பெரும்பான்மை சமூகத்தினருக்கு தனிப்பட்ட மரியாதை உள்ளது. அவர் களின் உணர்வுகளை நாம் மதிக்க வேண்டும். உணவுப் பொருளில் நாம் எதையும் சாப்பிடலாம். ஒரு பொருளின் மீது தடை விதிக்கும்போது, ஏன் நீங்கள் பாதிக்கப்பட்டதாக கருதுகிறீர்கள். ஒருதரப்பு மக்களின் உணர்வுகளை புண்படுத்திவிட்டு அப்பொருளை நீங்கள் சாப்பிட நினைப்பது நியாயமில்லை” என்றார்.

காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு

முன்னாள் காங்கிரஸ் தலை வரான நஜ்மா, “முந்தைய காங்கிரஸ் அரசு சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் வகையிலேயே செயல்பட்டது” என்றும் குற்றம் சாட்டினார். இதுபற்றி அவர் கூறும்போது, “துரதிருஷ்டவசமாக முந்தைய காங்கிரஸ் அரசு சிறுபான்மை யினரின் உணர்வு களை மட்டுமே எப்போதும் பேசியது. ஆனால் நாம் பெரும் பான்மையினர் உணர்வு களையும் மதிக்க வேண்டும்” என்றார்.

வக்ஃபு வாரிய சொத்துகள்

வக்ஃபு வாரிய சொத்துகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது குறித்து நஜ்மா கூறும்போது,

“இது தொடர்பான மசோதா மாநிலங்களவை நிலைக் குழுவின் பரிசீலனையில் உள்ளது. சட்ட விரோத ஆக்கிரமிப்பா ளர்களிடம் இருந்து இந்த சொத்து களை விடுவிக்கத் தேவையான சட்டரீதியிலான அதிகாரங்களை இந்த மசோதா தருகிறது. வக்ஃபு வாரிய சொத்துகளில் 40 சதவீதம் ஆக்கிரமிப்பாளர்களிடம் உள்ளது.

கடந்த 60 ஆண்டுகளில் தொடக்க நிலையிலேயே உரிய கவனம் செலுத்தியிருந்தால் இந்த ஆக்கிரமிப்புகளை தடுத் திருக் கலாம்.

இந்த விவகாரத்தில் மோடியின் அரசு நேர்மையுடன் செயல் படுகிறது. முந்தைய ஆட்சியில் இதற்கான நடவடிக்கைகள் எழுத்து வடிவிலேயே இருந்தது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x