

சாகித்ய அகாடமியின் பெருமைமிக்க, ‘பாஷா சம்மான்’ விருது தமிழறிஞர் க. மீனாட்சி சுந்தரம் உட்பட மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
2013-ம் ஆண்டுக்கான பாஷா சம்மான் விருது, க. மீனாட்சி சுந்தரத்துக்கும், 2014-ம் ஆண் டுக்கான விருது ஆச்சார்யா முனீஷ்வர் ஜா ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. 1925-ம் ஆண்டு பிறந்த மீனாட்சி சுந்தரத்துக்கு, சங்க மற்றும் இடைக்கால இலக்கியத்துக்கு அவர் அளித்த பங்களிப்புக்காக விருது அளிக்கப்படுகிறது. சாரு சந்திர பாண்டே மற்றும் மதுரா தத் மத்பால் ஆகியோர் குமாவ்னி மொழிக்கு அளித்த பங்களிப்புக்காக இணைந்து விருது பெறுகின்றனர்.
ரூ.1 லட்சம் அடங்கிய இவ்விருதை விரைவில் குடியரசுத் தலைவர் வழங்குவார்.