உலக அகதிகள் தினம் நாடு முழுவதும் அனுசரிப்பு

உலக அகதிகள் தினம் நாடு முழுவதும் அனுசரிப்பு
Updated on
1 min read

நம் நாட்டில் உலக அகதிகள் தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

போர், வறுமை போன்ற பல காரணங்களால் சொந்த நாட்டில் வாழ முடியாமல், மற்ற நாடுகளுக்கு அகதிகளாகப் பலர் குடியேறுகின்றனர். அவர்களின் துயரங்கள், மன உறுதி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, ஆண்டுதோறும் ஜூன் 20-ம் தேதி உலக அகதிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, உலக அகதிகள் தினம் நம் நாட்டிலும் நேற்று அனுசரிக்கப்பட்டது.

நாட்டின் பல்வேறு நகரங் களில் அகதிகள் தின நிகழ்ச்சி ஏற்பாடுகளை, அகதிகளுக்கான ஐ.நா. ஹை கமிஷனர் (யுஎன்எச்சிஆர்) செய்திருந்தார்.

இதுகுறித்து யுஎன்எச்சிஆர் நேற்று வெளியிட்ட அறிக்கை யில், ‘‘உலக அகதிகள் தினத்தில் அகதிகளின் மன உறுதியையும் வாழ்க்கை போராட்டத்தில் இருந்து அவர்கள் மீண்டெழும் நிலையையும் நாம் கொண்டாடு வோம். உலகம் முழுவதும் புலம் பெயர்ந்து வாழும் அகதிகளுக்கு ஆதரவாக இருப்போம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் நடந்த நிகழ்ச்சியில், யுஎன்எச்சிஆர் ஆதரவாளர் பாலிவுட் நடிகர் ஜான் ஆப்ரஹாம் பங்கேற்றார். ஆப்கன், மியான்மர், இலங்கை, சோமா லியாவில் இருந்து வந்து நம் நாட்டில் அகதிகளாக தங்கி யுள்ளவர்களை ஜான் சந்தித்து உரையாடினார். அந்த நாடுகளைச் சேர்ந்த இளம் அகதி களிடம் அவர் பேசும்போது, கல்வியின் முக்கியத்துவம், அர்த் தமுள்ள வாழ்க்கை வாழ்வதற்கு செய்ய வேண்டிய பணிகளை அவர் எடுத்துரைத்தார்.

டெல்லியில் அகதிகள் தினத்தை முன்னிட்டு, ராஜீவ் சவுக் மெட்ரோ ரயில் நிலையத் தில் பிரபல புகைப்பட கலைஞர் ரகுராயின் புகைப்பட கண்காட்சி நேற்று நடைபெற்றது. இதில் அகதிகளின் வாழ்க்கை போராட் டத்தை பிரதிபலிக்கும் பல புகைப்படங்கள் இடம்பெற்றன.

இந்தியாவில் மொத்தம் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேறு நாடுகளில் இருந்து வந்து தஞ்சம் அடைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் 26,500 பேர் அகதிகள். 5,700 பேர் இந்தியாவில் தஞ்சம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆப்கன், மியான்மரை சேர்ந்தவர்கள். தவிர சோமா லியா, இராக், இரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடைக்கலம் கேட்டு விண்ணப் பித்துள்ளனர். இவர்கள் டெல்லி, தெலங்கானா, ஜம்மு, ஹரி யாணா, ராஜஸ்தான், மகாராஷ் டிரா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in